பொது செய்தி

இந்தியா

சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.குஜராத்தின், கிர் சோம்நாத் மாவட்டத்தில், 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான, சோம்நாத் சிவன் கோவில் உள்ளது.
குஜராத், சோம்நாத்கோவில், அறக்கட்டளை, தலைவர், பிரதமர் மோடி, சோம்நாத்கோயில், மோடி, நரேந்திர மோடி,

புதுடில்லி: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

குஜராத்தின், கிர் சோம்நாத் மாவட்டத்தில், 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான, சோம்நாத் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் அறக்கட்டளை தலைவராக இருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், கடந்த 2020 அக்., மாதம் காலமானதை தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் கடந்த ஜன.,11ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக இருந்ததால், கூட்டம் 18 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று நடந்த கூட்டத்தில், சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, மோடியின் பெயரை, உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். இதனையடுத்து, அறக்கட்டளை தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக மோடி உள்ளார்.


latest tamil news




அறக்கட்டளை உறுப்பினர்களாக, அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கோல்கட்டாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான அம்புஜா நியோடியா நிறுவன சேர்மன் ஹர்ஷ்வர்தன் நியோடியா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலர் பிரவின் லஹரி, ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் வராவல், ஜீவன் பர்மர் ஆகியோர், உள்ளனர். இந்த அறக்கட்டளை உறுப்பினர் பதவிக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 4 பேரை பரிந்துரை செய்ய முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202104:23:43 IST Report Abuse
J.V. Iyer எங்கெங்கு நேர்மை, நாணயம் இருக்கிறதோ அங்கு ஊழல் இருக்காது. பிரதமர் மோடிஜி இந்தியாவுக்கு கிடைத்த வரம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜன-202100:56:25 IST Report Abuse
தல புராணம் இன்னொரு பி.எம் கேர்ஸ்.. இதிலேயும் பணத்தை போடலாம்..
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-ஜன-202121:50:15 IST Report Abuse
தஞ்சை மன்னர் இவர் இன்னும் குஜராத் முதலைச்சர் நினைவாகவே இருக்கார் இந்தியாவில் இன்னும் பல மாநிலங்கள் இருப்பதை இவருக்கு நினைவூட்ட வேண்டும் பல முக்கிய திட்டங்கள் அனைத்தயும் குஜராத்துக்கே திருப்பி விட்டு கொண்டு இருக்கார் இதை யாருக்கும் புரியுதா இல்லையா என்று தெரியவில்லை பெரிய பெரிய வங்கி மோசடியில் பின்னணியில் இருப்பது குஜராத் பணியா கூட்டம் இருக்கின்றது, பிரதமர் வேடமிட்ட குஜராத் முதல்வர் இவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X