வரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி?

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
பிரிஸ்பேன்: 'இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,' என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது.ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது நாள் முடிவில் 62
TeamIndia,INDvsAUS, India, Won

பிரிஸ்பேன்: 'இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,' என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது நாள் முடிவில் 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட்டுகளுடன் வலுவாக இருந்தது. மூன்றாவது நாள் போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் அனைவரும் நடையை கட்ட, மூன்றாவது நாளில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னுக்கு சுருண்டது. டெஸ்ட் அரங்கில் இது தான் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆனது. கடைசியில் 8 விக்கெட்டில் தோற்றது. ஆஸ்திரேலியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.


latest tamil news





பேச்சா பேசுனாங்க...


* முதல் போட்டியுடன் கேப்டன் கோஹ்லி நாடு திரும்பினார். முகமது ஷமி காயத்தால் நாடு திரும்பினார். இனி ரகானே தான் கேப்டன். 'இனி இந்தியா அவ்வளவு தான், டெஸ்ட் தொடரில் 0-4 என 'ஒயிட் வாஷ்' ஆகும்,' என்றார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் பாண்டிங், மார்க் வாக்.
*'கோஹ்லி இல்லாமல் இந்தியா எப்படி பேட்டிங் செய்யும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை,' என்றார் மற்றொரு முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

* 'அடிலெய்டு டெஸ்டில் தோற்ற பின், இனி இந்தியா மீண்டு வருவது சிரமம்,' என்றார் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் (ஆஸி.,).


latest tamil news





ரகானே சதம்


ஆனால் மெல்போர்னில் இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 195, 200 ரன்கள் தான் எடுத்தது. கேப்டனாக களமிறங்கிய ரகானே சதம் அடிக்க இந்தியா எழுச்சி பெற்றது. 8 விக்கெட்டில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. தொடர் 1-1 என சமன் ஆனது.


அஷ்வின்-விஹாரி எழுச்சி


சிட்னி டெஸ்டில் உமேஷ் விலகினார். லோகேஷ் நாடு திரும்பினார். இம்முறை பேட்டிங்கில் சுதாரித்த ஆஸ்திரேலியா 338, 312/6 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது. முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு சுருண்ட இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டாது என மீண்டும் வீராப்பு பேசினார் பாண்டிங்.

ஆனால் கடைசி நாளில் எழுச்சி பெற்ற இந்திய அணிக்கு அஷ்வின், ஹனுமா விஹாரி இணைந்து 42.4 ஓவர்கள் அவுட்டாகாமல் தாக்குப்பிடித்து, போட்டியை 'டிரா' செய்ய , எளிதாக வெல்ல நினைத்த ஆஸ்திரேலியா கனவு கலைந்தது. தொடர் 1-1 என சமனில் நீடித்தது.


ஜூனியர்கள் அபாரம்


உலகின் அதிவேக ஆடுகளம் என பெயர் பெற்றது பிரிஸ்பேனின் 'காபா'. இங்கு கடந்த 33 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி தோற்றதே இல்லை. இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லை. நமது அணியில் அஷ்வின், ஜடேஜா, பும்ரா என பல சீனியர்கள் இல்லை.

முகமது சிராஜ் (3 போட்டி), ஷர்துல் தாகூர் (2 போட்டி), நவ்தீப் சைனி (2), நடராஜன் (1), வாஷிங்டன் சுந்தர் (1) என சாதாரண இளம் பவுலர்களுடன் களமிறங்கியது இந்தியா.


latest tamil news




பேட்டிங்கில் இத்தொடரிலேயே அதிக ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா (369). இந்திய அணியை குறைவான ரன்னுக்கு சுருட்டி, முதல் இன்னிங்சில் அதிக முன்னிலை பெற நினைத்த ஆஸ்திரேலிய ஆசைக்கு வாஷிங்டன் சுந்தர் (62), ஷர்துல் (67) இணைந்து பெரிய 'அணை' போட்டனர். முதல் இன்னிங்சில் இந்தியா (336) 33 ரன்கள் மட்டும் பின் தங்கியது.

இரண்டாவது இன்னிங்சில் வேகமாக ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா (294) இந்தியாவுக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சிராஜ் 5 விக்கெட் சாய்த்தார்.

இம்முறை பேட்டிங்கில் சுப்மன் கில் (91) மிரட்டினார். புஜாரா ஒருபக்கம் சுவராக நின்று ஆஸ்திரேலிய பவுன்சர்களை தன் உடலில் தாங்கிக் கொண்டார். கை, வயிறு, மார்பு, முன், பின் தலையில் என பல இடங்களில் பந்து தாக்கிய போதும் அசராமல் விக்கெட் சரிவை தடுத்தார்.

இவர் அவுட்டானதும் இனி போட்டி 'டிரா' தான் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் சேர்ந்து 53 ரன்கள் சேர்க்க, இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது. கடைசியில் ரிஷாப் (89) ஒரு பவுண்டரி அடிக்க, இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.


சபாஷ் சபாஷ்


அன்னிய மண்ணில் 0-1 என தொடரில் பின் தங்கி இருந்த 34 டெஸ்ட் தொடர்களில் ஒருமுறை கூட இந்தியா கோப்பை வென்றது இல்லை. 31ல் தோற்றது. 3 தொடர்களை மட்டும் 'டிரா' செய்திருந்தது. முதன் முறையாக 0-1 என பின் தங்கிய இந்தியா, அன்னிய மண்ணில் எழுச்சி பெற்று கோப்பை வென்றது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samayaraj - Banglaore,இந்தியா
20-ஜன-202120:21:25 IST Report Abuse
Samayaraj இந்திய அணியின் சிறந்த பதிலடி
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜன-202106:57:31 IST Report Abuse
 Muruga Vel பேட்ஸ்மேன்களை வேகப்பந்தால் தாக்குவதையே குறிக்கோளாக வைத்து ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆடினார்கள் ..புஜாரா எவ்வளவு முறை தாக்குதலுக்கு ஆளானார் என்பது பார்த்தவர்களுக்கே தெரியும் ...இளைஞர்களின் அபார ஆட்டம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நகர விடாமல் கட்டிப்போட்டது ..
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
20-ஜன-202105:42:55 IST Report Abuse
Viswam ஐ பி எல்இல் ஆஸ்திரேலிய பௌலர்களை அடித்து விளையாடிய தைரியம் இந்த டீமில் உள்ள புது முகங்களுக்கு. ரோஹித் சர்மா கைகொடுத்து அதிரடி ஆட்டம் ஆடி இருந்தால் புஜாரா இவ்வளவு அடிவாங்காமல் தப்பி இருக்கலாம். டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மன், கங்குலி, தோணி இருந்திருந்தால் ட்ரா செய்ய முயற்சித்திருப்பார்கள். கில், ரிஷப, சுந்தர், தாகூர் , நட்டு, சிராஜ் எல்லாம் இளம்கன்றுகள் பயமில்லாமல் பூந்து அடித்து தள்ளிவிட்டார்கள். கோஹ்லியின் ஆர்பாட்டம் ஆக்ரோஷம் மிகுந்த தலைமை பார்த்து சலித்த கண்களுக்கு அஜிங்க்ய ரஹானேவின் அமைதியான தலைமை மிகவும் நன்மை. கோஹ்லி இனி வரும் நாட்களில் சூப்பர்ஸ்டார் கெத்து காண்பித்து கோச் மற்றும் போர்டை போட்டு பார்க்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X