புதுடில்லி: 2021ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது எனவும், முழுபாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் .ள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடிய போது கூறியதாவது: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மற்றும் பிற மாநிலங்களின் பொதுத்தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படும். மாணவர்கள் அதை மட்டும் படித்து தேர்வுகளுக்கு தயாரானால் போதும். ஆனால், மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது. முழுமையான பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE