ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்து ராகுல் நேரில் பார்த்து சென்ற நிலையில், “அதிகாரத்தில் இருந்த போது உங்கள் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்” என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல் இன்று வேளாண் சட்டங்கள், லடாக் பிரச்னை உள்ளிட்டவை சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். முன்னதாக அவருக்கு
JPNadda, Jallikattu, Rahul, Questioned, ஜேபி நட்டா, ராகுல், ஜல்லிக்கட்டு

புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்து ராகுல் நேரில் பார்த்து சென்ற நிலையில், “அதிகாரத்தில் இருந்த போது உங்கள் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்” என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் இன்று வேளாண் சட்டங்கள், லடாக் பிரச்னை உள்ளிட்டவை சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.

முன்னதாக அவருக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா டுவிட்டர் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். “தனது மாத விடுமுறையிலிருந்து திரும்பி வந்துள்ள ராகுலிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.


latest tamil news




மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: அருணாச்சல பிரதேசம் உட்பட ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தை சீனர்களுக்கு நேரு பரிசளிக்கவில்லை என்பதை அவர் மறுக்க முடியுமா? ஏன் எப்போதும் காங்கிரஸ் சீனாவிடம் சரணடைகிறது. சீனாவுடனும், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சியுடனும் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ராகுலுக்கு விருப்பம் உள்ளதா? அவரது குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை பெற்ற சீன நன்கொடையை திருப்பி அளிப்பாரா? அல்லது அவர்களின் கொள்கைகளை சீனப் பணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரம் செய்வது தொடருமா?


latest tamil news


இந்திய விவசாயிகளைத் தூண்டிவிடுவதையும் தவறாக வழிநடத்துவதையும் காங்கிரஸ் எப்போது நிறுத்தும்? சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை காங்., கூட்டணி ஏன் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. ஏன் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கவில்லை? காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏழைகளாக இருப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும் அவருக்கு விவசாயிகள் மீது அனுதாபம் ஏற்படுமா? அனைத்து வேளாண் கமிட்டிகளும் மூடப்படும் என ராகுல் பொய்களை பரப்புகிறார். கமிட்டி சட்டத்திற்கு எதிராக காங்.,ன் தேர்தல் அறிக்கை இருக்கவில்லையா?

ராகுல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை ரசித்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது அவரது கட்சி ஏன் அதைத் தடைசெய்து, தமிழ் கலாச்சாரத்தை அவமதித்தது? இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் குறித்து அவர் பெருமைப்படவில்லையா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஜன-202108:43:56 IST Report Abuse
Lion Drsekar திறமையான கல்வி, வேலைவாய்ப்பு, லஞ்சம் இல்லா அரசு நிர்வாகம், நேர்மையான அரசு , எல்லாவற்றையும் விட மக்களுக்கு பாதுகாப்பு என எவ்வளவோ இருக்க பசுமாடு, காளைமாடு என்று காலத்தை வீணடிக்கவேண்டாமே, கடந்த காலம் கடந்ததாகவே போகட்டுமே, இனியாவது மக்களுக்காக சிந்தித்து நாட்டை நல்வழிப்பாதையில் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
20-ஜன-202108:40:59 IST Report Abuse
பேசும் தமிழன் ஜல்லிக்கட்டு க்கு அனும‌தி வழங்கிய கட்சி (நட்டா) வரலாம்..... ஆனால் தடை செய்த கான் கிராஸ் மற்றும் தீய முக ஏன் வர வேண்டும்.... கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லமால் இரண்டு வாரிசுகள் (உதய் மற்றும் பப்பு) என்னமா போஸ் கொடுக்காணுக
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-ஜன-202106:03:09 IST Report Abuse
Indhuindian இப்படியெல்லாம் எடக்கு மடக்க கேள்வி கேட்கக்கூடாது எங்க அரசியல் உங்களுக்கு தெரியாதா? நாங்க விவசாய சீர்திருத்தம் பண்ணொம்னு சொன்னோம் அன்னிக்கி ஆனா நீங்க சட்டம் கொண்டு வந்தவுண்டன் உடனே பொங்கி எழலையா அதுமாதிரிதான். ராமர் கோயில் கட்டக்கூடாதுன்னாம் ஆனா அப்புறம் நான் பூணல் போட்ட ப்ராம்மணான்னு சத்திய பிரமாணம் பண்ணலயா. அதுமாதிரிதான் இதுவும் இந்த மாதிரி பேசறதுதான் இப்போ எதிர்க்கட்சிகள் அதுவும் முக்கியமா காங்கிரஸின் கொள்கை, சித்தாந்தம், கோட்பாடு, தார்மீக உரிமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X