பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 20, 1987ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள, மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில், 1908 செப்., 26ம் தேதி பிறந்தவர், ம.ப.பெரியசாமி துாரன். சென்னை மாநிலக் கல்லுாரியில், சக மாணவர்களுடன் இணைந்து, 'வனமலர்ச் சங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து, பாரதி பாடல்களைப் பரவலாக்கினார்.கோபிசெட்டிபாளையம் வைரவிழா பள்ளியில், ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்
 இதே நாளில் அன்று

ஜன., 20, 1987

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள, மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில், 1908 செப்., 26ம் தேதி பிறந்தவர், ம.ப.பெரியசாமி துாரன். சென்னை மாநிலக் கல்லுாரியில், சக மாணவர்களுடன் இணைந்து, 'வனமலர்ச் சங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து, பாரதி பாடல்களைப் பரவலாக்கினார்.கோபிசெட்டிபாளையம் வைரவிழா பள்ளியில், ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட, கலைக் களஞ்சியத்தின் ஆசிரியராக பொறுப்பேற்று, 10 தொகுதிகளை வெளியிட்டார். பின், 100 பக்கங்களையுடைய, குழந்தைகள் கலைக்களஞ்சியத்தையும், 10 தொகுதிகளாக வெளியிட்டார்.
கர்நாடக இசை வல்லுனர், எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என, பன்முகம் கொண்டிருந்தார். 'பத்மபூஷன்' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 1987 ஜன., 20ம் தேதி, தன், 79வது வயதில் உயிரிழந்தார்.ம.ப.பெரியசாமி துாரன் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜன-202108:06:34 IST Report Abuse
Bhaskaran மூன்றாம்வகுப்ப தமிழ் பாடத்தில் ஐயா அவர்களின் பாட்டு இடம் பெற்றிருக்கும் .பின் சிறுவர் கதைகள் நிறைய எழுதி இருக்கிறார் படித்துள்ளேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X