பொது செய்தி

இந்தியா

டில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : பறவை காய்ச்சல் எதிரொலியாக, டில்லி செங்கோட்டையில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.டில்லி, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் கோழி இறைச்சி விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், டில்லி
டில்லி செங்கோட்டையில்  பார்வையாளருக்கு தடை

புதுடில்லி : பறவை காய்ச்சல் எதிரொலியாக, டில்லி செங்கோட்டையில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டில்லி, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் கோழி இறைச்சி விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news


இந்நிலையில், டில்லி செங்கோட்டையில் சமீபத்தில், 15க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. அச்சமடைந்த அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பினர்.
பறவை காய்ச்சலால் அவை இறந்தது உறுதியானது. இதையடுத்து, செங்கோட்டையை பொதுமக்கள் பார்வையிட, வரும், 26ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என, அதிகாரிகள் இன்று (ஜன.19) கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202108:19:35 IST Report Abuse
ஆப்பு 26 ந்தேதிக்குள்ளாற பறவைக்காய்ச்சலை ஒழிச்சுக் கட்டிருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X