பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுடன் புது குழு நாளை பேச்சு சுமுக தீர்வு காண மீண்டும் அழைப்பு

Added : ஜன 19, 2021
Share
Advertisement
புதுடில்லி:போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி, நாளை பேச்சு நடத்த உள்ளது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, 50 நாட்களுக்கு மேலாக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்க
 விவசாயிகளுடன் புது குழு நாளை பேச்சு சுமுக தீர்வு காண மீண்டும் அழைப்பு

புதுடில்லி:போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி, நாளை பேச்சு நடத்த உள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, 50 நாட்களுக்கு மேலாக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடத்திய ஒன்பது சுற்று பேச்சும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக, நான்கு பேர் அடங்கிய கமிட்டியை அமைத்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதில், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பூபிந்தர் சிங் மான், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரமோத் ஜோஷி, ஷேட்கெரி சங்கதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வட் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில், பாரதிய கிசான் சங்க தலைவர் பூபிந்தர் சிங் மான், கமிட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார்.உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள கமிட்டியில் உள்ளவர்கள், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உடையவர்கள் என்றும், அவர்களுடன் பேச்சில் ஈடுபட மாட்டோம் என்றும், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, உச்ச நீதிமன்ற கமிட்டி உறுப்பினரும், ஷேட்கெரி சங்கதனா அமைப்பின் தலைவருமான, அனில் கன்வட், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:விவசாயிகளுடனான, உச்ச நீதிமன்ற கமிட்டி உறுப்பினர்களின் முதல்கட்ட பேச்சு, நாளை நடக்கவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்து பேச்சு நடத்துவதே, மிகப் பெரிய சவாலாக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகள் மற்றும் இதர தரப்பினரின் கருத்துக்களை கேட்டுப் பெறுவோம்.
உச்ச நீதிமன்றம் எங்களிடம் ஒரு பொறுப்பை அளித்துள்ளது. அதை நேர்மையுடன் நிறைவேற்றுவதே எங்கள் கடமை. வேளாண் சட்டங்கள் குறித்து, கமிட்டியினரின் சொந்த கருத்துக்களை புறம்தள்ளி, பிரச்னைக்கு தீர்வு காண்பதே நோக்கம்.எங்களுடன் பேச்சு நடத்த தயங்கும் விவசாயிகளுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

நாங்கள் அரசியல் கட்சியையோ, அரசாங்கத்தையோ சார்ந்தவர்கள் அல்ல.நாங்கள் உச்ச நீதிமன்ற தரப்பை சேர்ந்தவர்கள். எனவே, உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எங்களிடம் தெரிவிக்கலாம்; அதை, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் பணி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X