பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கியை விட பெரிதா கூகுள்?

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :கூகுள் நிறுவனம், ரிசர்வ் வங்கியை விட தன்னை, 'சூப்பர்' கட்டுப்பாட்டாளராக நினைத்து செயல்படுகிறது என, ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன.ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், அண்மைக் காலமாக, கடன் வாங்கியவர்களின் தகவல்களை, அவர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தி,மன உளைச்சல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வரத்துவங்கி
ரிசர்வ் வங்கி,கூகுள், ஆன்லைன், கடன் நிறுவனங்கள்

புதுடில்லி :கூகுள் நிறுவனம், ரிசர்வ் வங்கியை விட தன்னை, 'சூப்பர்' கட்டுப்பாட்டாளராக நினைத்து செயல்படுகிறது என, ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், அண்மைக் காலமாக, கடன் வாங்கியவர்களின் தகவல்களை, அவர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தி,மன உளைச்சல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வரத்துவங்கி உள்ளன. இதற்கிடையே, இத்தகைய மன உளைச்சல், அவமானம் ஆகியவை காரணமாக, மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதை அடுத்து, ரிசர்வ் வங்கி, இத்தகைய ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை நெறிப்படுத்துவதற்கான பபரிந்துரைகளை வழங்க செயற்குழு ஒன்றை அமைத்தது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம், பயனர்களின் தனியுரிமை தகவல்களை அவர்களின் அனுமதிஇன்றி பயன்படுத்தியதாக கூறி, கிட்டத்தட்ட, 60 செயலிகளை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டது.மேலும், நாட்டின் விதிமுறைகளின் கீழ் செயல்படுவதை நிரூபித்தால் மட்டுமே, செயலிகள், பிளே ஸ்டோரில் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், கூகுள் நடவடிக்கை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இது குறித்து, இத்தகைய நிறுவனங்களுக்கான, 'எப்.ஏ.சி.இ.,' எனும் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கூகுள் நிறுவனம் தன்னை, சூப்பர் ரெகுலேட்டராக நினைத்து செயல்படுகிறது. ரிசர்வ் வங்கி கூட கேட்காத தகவல்களை, சான்றிதழ்களை, உரிமங்களை எல்லாம் கேட்கிறது.பெரும்பாலான செயலிகள், 7 முதல், 14 நாட்களுக்குள்ளான குறுகிய கால கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால், கூகுள், 60 நாட்களுக்கு குறைவான கடன்களை வழங்க கூடாது என சொல்கிறது.

குறுங் கடன் வழங்கும் செயலிகளில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்தவையாகும். அவற்றை ஏன் இங்கு செயல்பட, கூகுள் அனுமதிக்கிறது?அனைத்து நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான, சீரான கட்டுப்பாடுகளை கொண்டு வருமாறு கூகுள் நிறுவனத்திற்க்கு எழுதியுள்ளோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
20-ஜன-202110:33:25 IST Report Abuse
CBE CTZN இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை... சீனா செயலிகளை தடை செய்ய கோரிக்கை விடுதிருக்கலாம்..
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
20-ஜன-202109:24:37 IST Report Abuse
Amirthalingam Shanmugam கூகுளை இந்தியன் நிர்வகிக்கிறான் என்று மார்தட்டிக்கொள்ளும் அறிவாளிகள் எங்கே? சீனா நாட்டுச்செயலி என்று தெரிந்தும் அதை இந்திய மக்களிடம் உபயோகப்படுத்தி இந்தியர்களை வதை செய்வது எந்தவிதத்தில் நியாயம்.எந்த செயலியாக இருந்தாலும் அதை இந்தியாவில் உபயோகப்படுத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டாம்? நாட்டின் இறையாண்மைக்கே கேடு விளைவிக்கும் இன்னும் எத்தனை செயலிகள் நாட்டில் உலவிக் கொண்டுயிருக்கின்றன என்று யார் அறிவார்?.இந்தியாவில் இது போன்ற செயலிகளை துணை போகும் இந்திய கோடாரி "கைப்பிடிகளை" உடனே கண்டறிந்து களைய வேண்டும்.நமது இந்தியருக்கே உரித்தான இயங்குதளம் ஒன்றை விரைவில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
raskoolu - Madurai,இந்தியா
20-ஜன-202109:12:53 IST Report Abuse
raskoolu அது சரி, நாளைக்கு சரியா தகவல் இல்லாம எப்பிடி கூகுள் கடன் செயலிகளை அனுமதித்ததுன்னு கோர்ட்டு கேள்வி கேட்டா, இந்த செயலி நிறுவனங்கள் கூகிளுக்காக பதில் சொல்லுமா? லோன் வாங்குறவரு பாங்குக்கு போயி மானேஜர பாத்து பேசி, காரணம் சொல்லி, அதுல அந்த மேனஜருக்கு சரின்னு பட்டா மட்டுமே லோன் சாங்சன் ஆகும். இவ்வளவு செஞ்சும் அதுல திரும்பி வராத லோன்கள் இருக்கு. நிலைமை இப்பிடி இருக்குறப்ப, கொரோனா காரணம் காட்டி ஆள பாக்காமலேயே ஏன் லோன் தரணும்? அப்படி செஞ்சே ஆகணும்னா கூகிள் கேக்குற தகவலையும் குடுங்க. இந்த காலத்து ஜெனரேசன் பணத்த கையால கூட தொட்ருக்க மாட்டான், அவன் பாக்குற எல்லாமே நம்பர் தான். பணத்தொட அருமை அவனுக்கு கண்டிப்பா தெரியாது. பேங்க் அத நல்லாவே யூஸ் பன்னிக்குது, அதனால தான் இந்த பிரச்சினை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X