கவர்னர் மாளிகை முன் முதல்வர் தர்ணா

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகை முன் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அமைச்சருக்கு ஆதரவாக முதல்வரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் தர கோரி கடந்த 10ம் தேதி முதல் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நேற்று
கவர்னர் மாளிகை,  முதல்வர், அமைச்சர், தர்ணா

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகை முன் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அமைச்சருக்கு ஆதரவாக முதல்வரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொகுதி
மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் தர கோரி கடந்த 10ம் தேதி முதல் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நேற்று 10வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.காலை 10:30 மணிக்கு அமைச்சர் கந்தசாமி கவர்னர் மாளிகைக்கு காரில் சென்றார். கவர்னரை சந்திக்க அனுமதிக்குமாறு போலீசாரிடம் கேட்டார். கவர்னர் நேரம் ஒதுக்காததால் அனுமதியில்லை
என சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா கூறியதால் கவர்னர் மாளிகை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. க்கள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் முதல்வர் அமைச்சர் எம்.எல்.ஏ. க்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதி கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் காங். கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.'கவர்னரின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்' என முதல்வர் நாராயணசாமி அழைத்தார். இதை ஏற்று அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை கைவிட்டு முதல்வருடன் புறப்பட்டு சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜன-202116:32:08 IST Report Abuse
Endrum Indian அம்மாடி இப்படி பார்த்தால் லேப்டினண்ட் கவர்னர் தான் புதுச்சேரியில் மிக உயர்ந்த பதவி என்று வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜன-202116:05:34 IST Report Abuse
sankaseshan தமிழகத்து வாசகர்கள் கமெண்ட்ஸ் அடிப்பதில் கில்லாடிகள் நாராயண சாமி மௌன சாமியாருடன் என்ன கெத்தாக வருவார் இப்போ அசிங்க பட்டு உக்காந்திருக்கார் சாமி இருக்கறார் தட்டிக்கேட்க . லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக வருவார் .
Rate this:
Cancel
20-ஜன-202112:21:21 IST Report Abuse
ஆரூர் ரங் இப்போ இடமில்லை.😉அடுத்த பந்திக்கு வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X