கோல்கட்டா கோல்கட்டாவின் சாந்தி நிகேதன் வளாகத்தில் உள்ள தன் வீடு, விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டை திரும்ப பெறும்படி, பல்கலை துணை வேந்தருக்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை, அமார்த்யா சென், கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
தலைநகர் கோல்கட்டாவில் உள்ள, சாந்தி நிகேதன் வளாகத்தில், மிகப் பழமையான, விஸ்வபாரதி மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற, டாக்டர் அமார்த்யா சென் வீடு, சாந்தி நிகேதன் வளாகத்திற்குள் உள்ளது.
![]()
|
இந்த வீடு கட்டப்பட்டுள்ள நிலம், விஸ்வபாரதி பல்கலைக்கு சொந்தமானது என்றும், அதில், அமார்த்யா சென் சட்ட விரோதமாக வீடு கட்டியுள்ளார் என்றும், பல்கலை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில், அமார்த்யா சென் வீடு அமைந்துள்ள நிலத்தை அளவிட்டு, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படி, மாநில அரசுக்கு, பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அமெரிக்காவில் வசிக்கும் அமார்த்யா சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சாந்தி நிகேதன் வளாகத்தின் உள்ளே, என் வீடு இருக்கும் நிலம், 1940களில், என் தந்தைக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டது. குத்தகைக் காலம் இன்னும் முடிவடையவில்லை.
மேலும், குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஒட்டியுள்ள இடங்களை, அவர் விலை கொடுத்து சொந்தமாக வாங்கியுள்ளார்.
அதற்கு வரியும் கட்டி வருகிறேன். எனவே, சட்ட விரோதமாக அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட வில்லை. பல்கலைக்கழகம் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுஆதாரமற்றது.மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தில், இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், குற்றச்சாட்டை திரும்ப பெறும்படி, விஸ்வபாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் பித்யுத் சக்கரவர்த்திக்கு, அமார்த்யா சென் கடிதம்
எழுதியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE