அரசியல் செய்தி

தமிழ்நாடு

புத்தர் போல் வேடமிடுகிறார் ஸ்டாலின்:

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை ''தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்தது; அதை, அ.தி.மு.க., மீட்டுக் கொடுத்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது, சர்வாதிகாரியாக செயல்பட்டார். தற்போது, புத்தர் போல வேடமிடுகிறார்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். சென்னை, துரைப்பாக்கத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர்
புத்தர் ,வேடம், ஸ்டாலின் , ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை ''தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்தது; அதை, அ.தி.மு.க., மீட்டுக் கொடுத்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது, சர்வாதிகாரியாக செயல்பட்டார். தற்போது, புத்தர் போல வேடமிடுகிறார்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை, துரைப்பாக்கத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழகத்தை, காங்., - தி.மு.க., ஆண்டுள்ளன. அ.தி.மு.க., ஆண்டு கொண்டிருக்கிறது. யார் சிறப்பான ஆட்சியை தந்தது என்பதை, தமிழக மக்கள் சரியாக எடை போட்டு பார்ப்பர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 2006 -- 2011 வரை துணை முதல்வராக இருந்தார். அப்போது, சர்வாதிகாரி போல நடந்தார். தற்போது, புத்தர் போல் வேடமிட்டு, கிராம சபை கூட்டம் நடத்தி பேசுகிறார்.

தி.மு.க., ஆட்சியில், எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, நில அபகரிப்பு நடந்தது. தி.மு.க., ஆட்சியில் மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை, ஜெ., ஆட்சிக்கு வந்ததும் மீட்டு, நில உரிமையாளர்களிடம் வழங்கினார். ஸ்டாலின் எப்படி வேஷமிட்டு வந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்கள், மக்களிடம் தோலுரித்து காட்டுவர்.தி.மு.க., ஆட்சியில், மின் தடையை நீக்க முடியாததால், ஆட்சியை இழந்தனர்.ஜெ., மின் மிகை மாநிலமாக மாற்றினார்.

இது தானே நல்ல ஆட்சியின் அடையாளம். முன்னர் குடும்ப ஆட்சி நடத்திய தி.மு.க.,வினர், மீண்டும் அதிகாரத்தை கையில் எடுத்து, லஞ்ச, லாவண்ய ஆட்சி நடத்த, ஆளாய் பறக்கின்றனர்; அது நடக்காது. எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக முடியாது. தி.மு.க.,வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே, எங்கள் நோக்கம். மீண்டும், 2021ல், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது, நம் இலக்காக இருக்க வேண்டும். அதற்கேற்ப செயல்படுங்கள்; ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-202107:39:09 IST Report Abuse
Bhaskaran ஆட்சி அதிகாரம் இளம் மனைவி பச்சிளம் சிசு இவையனைத்தையும் உதறித்தள்ளி மக்கள் துயர்துடைக்க அரண்மனையில் இருந்து வெளியேறிய கவுதம சித்தார்தரையும் .எல்லாம் குடும்பத்துக்காக என்று வாழும் இவரையும் ஒப்பிடுவது மகா பாவம்
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
20-ஜன-202120:10:21 IST Report Abuse
Naduvar புத்தர் போல் வேடமிடுகிறார் ஸ்டாலின்: இதை சொல்கிறார் தர்மர்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-ஜன-202119:52:48 IST Report Abuse
vbs manian சொத்து சுகம் மனைவி மக்கள் அரண்மனை போக வாழ்வு என்று எல்லாவற்றையும் துறந்து வாழ்க்கையின் பொருளை உண்மையை தேடி சென்ற புத்தரை அவமானப்படுத்த வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X