பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் அன்பே மருந்து: கமல் டுவிட்

Added : ஜன 19, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‛மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்' என தெரிவித்துள்ளார்.கமலுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட, அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் வலி இருந்த நிலையில், இன்று(ஜன.,19) மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்து
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை: காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‛மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்' என தெரிவித்துள்ளார்.

கமலுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட, அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் வலி இருந்த நிலையில், இன்று(ஜன.,19) மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்த இந்த அறுவை வெற்றிகரமாக நடந்ததாகவும், சிகிச்சைக்குப்பின், கமல் நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை சமூக வலைதளங்கள் வழியாக உங்கள் இதயங்களுடன் உறவாடல் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
20-ஜன-202114:15:38 IST Report Abuse
Ramachandran V என்ன தவறு செய்தார் ஏன் இந்த விமர்சனங்கள் நம்மவர் நல்லவர் யாரையும் ஏமாற்றவில்லை தனிப்பட்ட முறையில் எல்லோரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202112:35:48 IST Report Abuse
pattikkaattaan நலம் பெற வாழ்த்துக்கள் .. மனதில் பட்டதை துணிவுடன் பேசுங்கள் .. ஓட்டுக்காக பொய் பேசவேண்டாம்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஜன-202112:21:46 IST Report Abuse
Malick Raja ஏன் பிறந்தாய் மகனே .. ஏன் பிறந்தாயோ .. பாட்டு கமலின் தற்போதைய நிலைக்கு சரியாக இருக்கும் . காரணம் ஆளத்தெரியாமல் காலைவிட்ட கதையாக அரசியல் பயணம் இருப்பது உண்மை .. இதோடு போய்விட்டால் நல்ல மரியாதை .. இல்ல போட்டிதான் தான் என்றால் .. சிவாஜி ,பாக்யராஜ் ,விஜயகாந்த் ,சரத்குமார் ,போன்றோருக்கு என்ன ஏற்பட்டதோ அதுதான் .. கருத்தை சிந்தித்தால் நிலைமை வெளிப்படும் .. அரோகரா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X