பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை தமிழகத்தில், 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, 2020 டிச., 2ல், கல்லுாரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, நேற்று முதல்,
பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் உற்சாகம்

சென்னை தமிழகத்தில், 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, 2020 டிச., 2ல், கல்லுாரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, நேற்று முதல், பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. 10 மாதங்களாக, வீடுகளில் முடங்கிய மாணவ -மாணவியர் ஆர்வத்துடன், காலை, 9:00 மணிக்கே, தங்கள் பெற்றோருடன், பள்ளிக்கு வந்தனர்.

அனைத்து மாணவ- மாணவியரும், முக கவசம் அணிந்துள்ளனரா என பார்க்கப்பட்டு, பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் வெப்ப நிலையும், தானியங்கி கருவிகள் வாயிலாக பரிசோதிக்கப்பட்டன.
ஆசிரியர்களும், பணியாளர்களும், முக கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்த பின்னரே, பள்ளிக்குள் வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டதால், முதல் நாளான நேற்று காலையில், வழிபாட்டு கூட்டம் நடத்தப்பட்டது. தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள், கொரோனா விழிப்புணர்வு அம்சங்களை எடுத்துக் கூறினர்.

பல பள்ளிகளில், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசகர்கள் வாயிலாக, கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இன்று காலையிலும், கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அதன்பின், வகுப்புகள் துவங்குகின்றன.


வகுப்புக்கு 25 மாணவர்!

ஒவ்வொரு வகுப்பிலும், 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, ஒவ்வொரு வகுப்பிலும், தலா, 25 மாணவர்கள் அமரும் வகையில், இடைவெளி விட்டு, இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202114:37:59 IST Report Abuse
Lakshmi Narayan  Trichy இந்த பெண் குழந்தைகளுக்கு ஏன் துப்பட்டாவை சீருடையாக மீண்டும் கொடுக்கக் கூடாது. கரோனா வுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் பெண் குழந்தைகளின் மாண்பும் காப்பாற்படும். ஏன் ஒரு பத்திரிகையாளரோ கல்வி அதிகாரிகளோ பரிந்துரைக்க் கூடாது! தினமலர் மனது வைத்தால் முடியுமே..
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
20-ஜன-202112:00:57 IST Report Abuse
தத்வமசி வாழ்த்துக்கள். இந்த இரு வகுப்புகளும் நன்றாக நடைபெற்று, மற்ற வகுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் திறக்க வேண்டும். மாணவர்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் மூலம் பயணிக்கும் ஆண் மாணவர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. டிக்கட் வழங்க மறுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். டிக்கெட் மற்றுமில்லை சீசன் டிக்கட்டும் வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
20-ஜன-202104:24:02 IST Report Abuse
கும்புடுறேன் சாமி பள்ளிகள் திறப்பு அதனால் பிஜேபி வெற்றி வாய்ப்பு சரிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X