பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு மேலும் 5 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ''தமிழகத்திற்கு மேலும், 5.08 லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்துகள், இன்று (ஜன.,20) தமிழகம் வர உள்ளன,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.நாடு முழுதும், சுகாதார பணியாளர்களுக்கு, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து, நான்காவது நாளாக நடைபெறும் தடுப்பூசி முகாமை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்,
Covishield Vaccine, TN corona, Covid 19, Corona Virus, vaccine, Corona Vaccine, Covid 19 vaccine

சென்னை: ''தமிழகத்திற்கு மேலும், 5.08 லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்துகள், இன்று (ஜன.,20) தமிழகம் வர உள்ளன,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாடு முழுதும், சுகாதார பணியாளர்களுக்கு, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து, நான்காவது நாளாக நடைபெறும் தடுப்பூசி முகாமை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தடுப்பூசிக்கு, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொங்கல் விடுமுறை என்பதால், இரண்டு நாட்களாக, தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. சில மாநிலங்களில், எல்லா நாட்களும் தடுப்பூசி செலுத்த, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.


latest tamil news



தமிழகத்தில், தொய்வின்றி வாரம் முழுதும், தடுப்பூசி செலுத்த, அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக, 5 லட்சத்து, 8,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள், இன்று வர உள்ளன. சுகாதார பணியாளர்களை தொடர்ந்து, அடுத்த பிரிவு முன்களப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

இதுவரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1.07 லட்சம் போலீசார்; 70 ஆயிரம் உள்ளாட்சி ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202111:03:03 IST Report Abuse
ஆரூர் ரங் பெரியம்மைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது இதைவிட அதிக அச்சமிருந்தது. ஆனால் அத்தனையும் எதிர்கொண்டு வென்றோம். அறிவியல் முன்னெற்றமடைந்த இப்போது அனைத்து பக்கவிளைவுகளும் முன் கூட்டியே அறியமுடிவதால் வெற்றிகரமாக👍🏻 ஆபத்தின்றி தடுப்பூசி போடமுடியும். மக்களே உணர்வீர். அரசு மீதுள்ள வேண்டாத ஆத்திரத்தில் தடுப்பூசியைத் தவிர்த்தால் ஆபத்து மக்களே உங்களுக்குத்தான்
Rate this:
Cancel
20-ஜன-202110:55:42 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக காங் பொய்ப் பிரசாரத்தால் முதலிரண்டு நாட்கள் அச்சமிருந்தது. தடுப்பூசி திட்டம் தோல்வியடைந்தால் அது மோதியின் இமேஜை டாமேஜ் ஆக்கும் என்று கனவு கண்டனர்😑. தடுப்பூசி ஆதரவுப் பிரச்சாரம் செய்வோர திமுக ஆட்சிக்கு வந்தால்😡 பழிவாங்குவர் எனும் பயம்கூட இருக்கலாம்.ஆனால் நல்லவர்களே வாழ்வர்.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
20-ஜன-202110:02:47 IST Report Abuse
Hari தி மு க வினர் தடுப்பூசி போட்டவுடன், வேல் வேல் வெற்றிவேல் வீரவேல் என கோசம் போடும் மனநிலை அடைவதாக இன்று சுடலையின் சீரிய நமக்கு நாமே என்ற கருத்து ஓன்று உலவுகிறது எதுக்கும் உங்கள் தலைவரைப்போல இளமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X