புதுடில்லி: ரயில்வே அதிகாரிகள் மீதான லஞ்ச வழக்கில், டில்லி ஓட்டலில், தனியார் நிறுவனத்தினர் மறைத்து வைத்திருந்த, 2.04 கோடி ரூபாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
* டில்லியில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்துவதில், விவசாய சங்கத்தினர் உறுதியாக உள்ளதால், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
* 'கூகுள்' நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக, திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்து, 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவரை, குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
* குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்ததில், 1 வயது பெண் குழந்தை மற்றும் எட்டு பெண்கள் உட்பட, 15 பேர் பலியாயினர்.
*புதுச்சேரியின் வெண்ணிலா நகரில் வசிக்கும் நிவேதிதா என்ற நர்ஸ் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மைக்கேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் நிகழ்வு !
* முதுமலை அருகே இரண்டு மாதமாக காது அறுந்து காயத்துடன் சுற்றி வந்த காட்டு யானை, பரிதாபமாக பலியானது.
* கூடுவாஞ்சேரி அடுத்த, காரணைப்புதுச்சேரியில், மாமியரை கொலை செய்ய முயன்ற மருமகனை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.
* நீலகிரி மாவட்டம், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு (வயது 50) கேரளா, நிலம்பூர் பகுதியை சேர்ந்த, பின்ஸ் என்பவருக்கு சொந்தமான, 10 டிப்பர் லாரிகளில், தினசரி கட்டுமான பொருட்களை இவ்வழியாக கொண்டு செல்ல ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆனந்தவேலுவை கைது செய்தனர்.
* திண்டிவனத்தில், அதிகாலையில் லாரி டிரைவரின் கவனக் குறைவால், மூன்று பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.
* ஆறு வயது சிறுமியிடம், பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, ஆறு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கடந்த 2008ல் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், இவர்கள் 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட நீதிபதிகள் அனைவரையும் விடுதலை செய்தனர்.
* சிங்கம்புணரியில் பத்திரம் பதிய ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில், சார்பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உலக நடப்பு !
* உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்படாமலே போக வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
* அர்ஜென்டினா, சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளிவில் 6.4 என்ற அளவில், ஏற்பட்டது.
* தாய்லாந்தின் சர்ச்சைக்குரிய அரசு நிந்தனை சட்டத்தின் கீழ், முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு, 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட, 11 பேர் பலியாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE