பொது செய்தி

இந்தியா

நேதாஜி பிறந்த நாளை வலிமை தினமாக கொண்டாட முடிவு: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ம் தேதி ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி கூறியதாவது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 தேதி, ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு அவரின்
Netaji Subhas Chandra Bose, birthday, Parakram Diwas

புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ம் தேதி ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி கூறியதாவது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 தேதி, ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு அவரின் 125வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. கோல்கட்டாவில், முதலாவது வலிமை தின நிகழ்ச்சி நடைறெ உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.


latest tamil news



நிகழ்ச்சியில், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது. முதலாவது வலிமை தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலை குழு ஒன்று அமைப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - karur,இந்தியா
20-ஜன-202117:46:22 IST Report Abuse
karthikeyan அருமை
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
20-ஜன-202113:53:48 IST Report Abuse
Allah Daniel காங்கிரஸ் கொத்தடிமைகளிடம் ... எனக்கு ஒரு சந்தேகமுங்க... காங்கிரஸ் இல் இன்னைக்கு சோனியாவிற்கு பதிலா ஒரு தலைவா கூட இல்லையாங்க?? நேதாஜி , சர்தார் படேல் போல அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு தலைவர் கூட இல்லையா? அது என்ன மாயமோ.. இல்லை மந்திரமோ... இந்த திருட்டு 'நேரு' வீடு ஆட்கள் மேலே எப்போதும் இவர்களுக்கு ஒரு ஆசை... கண்....
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-ஜன-202111:24:50 IST Report Abuse
ஆரூர் ரங் வங்காளத்துக்கு அடுத்தபடியாக போஸ் எனும் பெயரில் அதிகம் பேர் இருப்பது 👍🏻தமிழகத்தில்தான் . 😉ஆனால் இங்கு தேசபக்தி என்னவோ பெயருக்குத்தான் .😡 பிரிவினைவாதமே தலைதூக்கியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X