ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்து விட்டனர்; நீங்களும் அதையே தொடர்கிறீர்கள்...

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
காங்., முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்து, ஜல்லிக்கட்டை பார்த்தனர். இதன் மூலம், தி.மு.க., - காங்கிரஸ் நட்பு ஆழமானது என, காட்டுகின்றனர். உண்மை தான். தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் அளவுக்கு ஆழமானது.- நடிகை விந்தியா'ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்து விட்டனர்; நீங்களும் அதையே தொடர்கிறீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில்,
ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்து விட்டனர்; நீங்களும் அதையே தொடர்கிறீர்கள்...

காங்., முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்து, ஜல்லிக்கட்டை பார்த்தனர். இதன் மூலம், தி.மு.க., - காங்கிரஸ் நட்பு ஆழமானது என, காட்டுகின்றனர். உண்மை தான். தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் அளவுக்கு ஆழமானது.
- நடிகை விந்தியா


'ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்து விட்டனர்; நீங்களும் அதையே தொடர்கிறீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை பொதுச்செயலர் நடிகை விந்தியா.



தி.மு.க., மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. தி.மு.க., நிலைப்பாடு குறித்து, மதுரையில் அழகிரி கூறியதை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர். ஆக்கபூர்வமான செயல்பாடு இல்லாததால், தேர்தலில் ஸ்டாலின் திட்டங்கள் பலிக்காது.
- த.மா.கா., இளைஞர் அணி தலைவர் யுவராஜ்


'ரொம்ப நாட்களுக்கு பிறகு, பத்திரிகையாளர்களை சந்திக்கும் நீங்கள், சொல்வது சரியாகத் தான் இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., இளைஞர் அணி தலைவர் யுவராஜ் பேட்டி.



கொரோனாவால் மக்கள் கடும் அவதிப்படும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்த வண்ணமாக உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். அவற்றின் மீதான வரியை, மாநில அரசும் குறைக்க வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்


latest tamil news




'தமிழகத்தை துண்டாடும் விதமாகத் தானே, வழக்கமாக அறிக்கை விடுவீர்கள்; பொதுவான விவகாரத்திற்கு குரல் கொடுப்பது ஆச்சர்யமாக உள்ளதே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.



கருணாநிதி அகராதிப்படி, ஹிந்து என்றால் திருடன் என்று தான் அர்த்தம். சமீபத்தில் அவர் மகன் ஸ்டாலின், 'ஹிந்து என கூறினால், எனக்கு பற்றி எரிகிறது' என்றார். இந்நிலையில், 'ஹிந்துக்கள் எதிரிகள் அல்ல' என, ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன். அதை அவர் செயலில் காட்ட வேண்டும்.
- பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன்


'இதெல்லாம் தேர்தலுக்காக நடத்தப்படும் கூத்து; தேர்தல் முடிந்ததும், 'ஹிந்து என்றால், பலே திருடர்கள்' என்பர்...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் பேச்சு.



சென்னை அருகே காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை, 6,000 ஏக்கருக்கு விரிவாக்க திட்டமிட்டுள்ளனர். இது, சட்டத்திற்கு புறம்பானது; இத்திட்டத்தை அனுமதிக்க கூடாது. அந்த துறைமுகம் விரிவாக்கப்பட்டால், சென்னையில் உள்ள இரண்டு பொதுத்துறை துறைமுகங்களும் மூடப்படுவதுடன், அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு ஏற்படும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'பொதுத்துறை மீது கரிசனமா அல்லது அதானி மீதான கோபமா என தெரியவில்லையே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
21-ஜன-202103:11:46 IST Report Abuse
Baskar எல்லாம் உயருகிறது தான் உன் வாழ்க்கையும் உயருகிறது. நீயும் அந்த திருமாவும் ஒன்று தான். உன் முகத்தில் பௌடர் கொஞ்சம் அதிகமாக உள்ளது துடைத்து கொள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202117:50:31 IST Report Abuse
J.V. Iyer காங். முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்து மீண்டும் தமிழ்நாட்டை எப்படி ஆட்டை போடலாம் என்று விவாதித்தார்களோ
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
20-ஜன-202116:28:30 IST Report Abuse
Murthy ஹிந்து என்றால் திருடன் என்று அரபியில் அர்த்தமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X