பொது செய்தி

இந்தியா

ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

Added : ஜன 20, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர். திருப்பதி, திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில்
ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர்.

திருப்பதி, திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து, ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு நேற்று, மூன்று டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.


latest tamil news



'பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி' என, நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று கணக்கிடப்பட்டன. அதில், மூன்று கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை, நேற்று ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - Chennai,இந்தியா
21-ஜன-202102:46:02 IST Report Abuse
Venkatesh இவர்களில் ஒரு பிரிவினர் நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி நடி என்ற எண்ணம் கொண்டவர்கள்.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இது எமது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான செயல்னு மிஸ்டர் இந்துமத விரோதி சுடலை கான் போராடுவாரே
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜன-202120:40:52 IST Report Abuse
Rajagopal எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் ஆசிரியர், மகளுக்கு வந்த நோயால் மிகவும் கஷ்டப் பட்டார். பல வழிபாடு தலங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். சத்ய சாயி பாபா பஜனைகளில் உட்கார்ந்தார். முருகன் கோயில்களுக்கு சென்று வந்தார். வேளாங்கண்ணிக்கும் சென்று வந்தார். கஷ்டம் வரும் போது, அதற்கு விடிவு கிடைக்காத நிலையில் பலர் மதங்களையும், மரபுகளையும் பார்ப்பதில்லை. இதே போல எனக்குத் தெரிந்த இந்து நண்பர் டெல்லியில் இருக்கிறார். ஷேக் ஹஸ்ரத் நிஜாமுத்தின் தர்காவிற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் விடாமல் போய்வருகிறார் இன்னும். இந்தியாவில் இப்படி பல மத வழிமுறைகளை பின் பற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X