சென்னை: தமிழகத்தில் இன்று (ஜன.,20) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 6.26 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ல் துவக்கப்பட்டது. டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் திருத்தப் பணியின்போது பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (ஜன.,20) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க கோரி 21.82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுள்ள 21.39 லட்சம் பெயர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன. இறப்பு உள்ளிட்ட காரணங்களால் 5.09 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 3.32 லட்சம் பேர் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 3.09 லட்சம் பேரின் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் - 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர்
* ஆண் வாக்காளர்கள் - 3,08,38,473
* பெண் வாக்காளர்கள் - 3,18,28,727
* மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,246
* அதிக வாக்காளர்களை கொண்ட சட்டசபை தொகுதி - சோழிங்கநல்லூர் - 6,94,845 வாக்காளர்கள் (ஆண்கள்: 3,48,262; பெண்கள்: 3,46,476; மூன்றாம் பாலினத்தவர்கள்: 107)
* குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டசபை தொகுதி - துறைமுகம் - 1,76,272 வாக்காளர்கள் (ஆண்கள்: 91,936; பெண்கள்: 84,281; மூன்றாம் பாலினத்தவர்கள்: 55)
* 47 வெளிநாடு வாழ் தமிழர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
* 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் - 8,97,694 பேர் (ஆண்கள்: 4,80,953 ; பெண்கள்: 4,16,423; மூன்றாம் பாலினத்தவர்கள்: 318)
நீலகிரி:
நீலகிரியில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதன்படி, மூன்று தொகுதிகளில் மொத்தம், 5 லட்சத்து, 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 81 ஆயிரத்து 762, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 3 ஆயிரத்து 270, மூன்றாம் பாலினம் வாக்காளர்கள், 17 பேர் உள்ளனர். இறுதி பட்டியலில், 13 ஆயிரத்து 293 வாக்காளர்கள் அதிகப்படியாக சேர்ந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE