அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிர்ஷ்டத்தால் முதல்வர் ஆனவர் ஓ.பன்னீர்செல்வம்: ஸ்டாலின்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (109)
Share
Advertisement
தேனி: அரசியலில் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்ததால் தான், அவருக்கு மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.போடியில் நடந்த திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதாவின் முன்னால் நடித்து கொண்டிருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அரசியலில் ஒரு சிலருக்கு கிடைக்கும்
திமுக, கூட்டணி கட்சிகள், உதயசூரியன்,மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்

தேனி: அரசியலில் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்ததால் தான், அவருக்கு மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போடியில் நடந்த திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதாவின் முன்னால் நடித்து கொண்டிருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அரசியலில் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்ததால் தான், அவருக்கு மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது.

3 முறை முதல்வராக இருந்தும், மக்கள் நலன் குறித்தும், நாட்டிற்காக எதையாவது செய்வது குறித்தும் அவர் சிந்தித்தது இல்லை. அவரை முதல்வராக்கிய ஜெயலலிதா குறித்து கூட கவலைப்படவில்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறினார். ஆனால், என்ன மர்மம் என அவரும் சொல்லவில்லை.ஆளுங்கட்சியினரும் சொல்லவில்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க அவர் தயாராக இல்லை.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வராமல் விடப்போவதில்லை.


latest tamil news




திமுக ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன், கல்விக்கடன், ரத்து செய்யப்படும். 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாய கடன்களை ரத்து செய்ய முடியாது என்று அதிமுக அரசு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றது. ஆனால், விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று அவர்களும் அறிவிக்கக்கூடும். இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Hyderabad,இந்தியா
20-ஜன-202123:08:01 IST Report Abuse
Vinoth முதல்வர் ஆக்கவேண்டுமானால், குறைந்தபட்சம் அதிர்ஷ்டமாவது இருக்கவேண்டும்...
Rate this:
Cancel
20-ஜன-202122:46:52 IST Report Abuse
Velan, Chennai அந்த அதிர்ஷ்டம் கூட உனக்கு இல்லேப்பா..
Rate this:
Cancel
Jay - Bhavani,இந்தியா
20-ஜன-202122:44:56 IST Report Abuse
Jay எடப்பாடியை விட ஓபிஎஸ் ஐ விட தாங்கள் தான் முதலமைச்சர் பதவிக்கு மிகத் தகுதியானவர் என்று கூற முடியுமா? இன்று அரசியல் கூட்டத்தில் நான்கு வாக்கியங்களை தொடர்ந்து பேச முடியாத தாங்கள், தமிழ் நாட்டிற்காக தங்கள் கருத்துகளை தெளிவாக முன்வைக்க இயலுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X