மும்பை: மஹாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிப்பெற்ற கணவரை தோளில் தூக்கி சென்ற மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் தேர்தல் முடிவுகள் வெளியானதில், பாலு என்கிற பஞ்சாயத்துக்கு தலைவராக சந்தோஷ் சங்கர் குரா வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, சந்தோஷின் வெற்றியை அவரது மனைவி ரேணுகா கொண்டாடினார். அதன் வெளிப்பாடாக கணவரை தோளில் தூக்கி சுமந்தவாறு சாலையில் வெற்றிக் களிப்புடன் நடந்து வந்தார். தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE