நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய அலிபாபா நிறுவனர் ஜாக் மா

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஜிங்: கிட்டத்தட்ட 3 மாதங்கள் எங்கிருந்தார் எனத் தெரியாமல் தலைமறைவாக இருந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆசிரியர்களுடனான ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான
JackMa, China, Alibaba, Ant, ஜாக் மா, சீனா, அலிபாபா, ஆன்ட்

பீஜிங்: கிட்டத்தட்ட 3 மாதங்கள் எங்கிருந்தார் எனத் தெரியாமல் தலைமறைவாக இருந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆசிரியர்களுடனான ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், சீன அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின், 'ஆன்ட்' நிறுவன பங்கு வெளியீட்டை நிறுத்தியது. ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக கூறி, அபராதம் விதித்து, அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு, ஜாக் மா, எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.


latest tamil news


இதற்கு சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஊரக பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் ஜாக் மா கலந்து கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனை சீன பத்திரிகையாளர் ஒருவர், 'அவர் ஓடி ஒளியும் ஆளில்லை' என குறிப்பிட்டு அவரது 36 நொடிகள் கொண்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாத இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் தோன்றியதால், ஜாக் மா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raskoolu - Madurai,இந்தியா
20-ஜன-202117:15:16 IST Report Abuse
raskoolu ஏன் பேர அலி பாபான்னு வச்சுருக்காறாம்?
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
20-ஜன-202117:09:21 IST Report Abuse
Siva அலிபாபாவும் 4000 திருடர்களும் ஞாபகம் வந்தது. அது தவறா ? எண்ணிக்கை 40000 இருந்தால் என் குற்றம் அல்ல...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜன-202117:03:32 IST Report Abuse
Endrum Indian யாரு சொல்றது??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X