டிராக்டர் பேரணி: உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி குறித்து முடிவெடுக்க வேண்டியது டில்லி போலீஸ் தான் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்துள்ளது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தினத்தன்று, டில்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
farmer, republicday, tractor, rally, tractorrally, supremecourt, supremecourtofindia,  உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், டிராக்டர் பேரணி,  மத்திய அரசு

புதுடில்லி: குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி குறித்து முடிவெடுக்க வேண்டியது டில்லி போலீஸ் தான் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தினத்தன்று, டில்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பேரணி அல்லது கூட்டம் போன்றவற்றை அனுமதிப்பது அல்லது தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுப்பது சரியாக இருக்காது என நினைக்கிறோம். தற்போது, பேரணி குறித்து முடிவெடுக்க வேண்டியது போலீசார் தான். போலீஸ் முடிவு செய்யட்டும். நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்து, வழக்கை வாபஸ் பெற மத்திய அரசுக்கு அனுமதி வழங்கினர்.

இதனையடுத்து, பேரணி குறித்து டில்லி போலீசார் முடிவு செய்யட்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-ஜன-202122:00:49 IST Report Abuse
bal எல்லாரும் காங்கிரெஸ்க்காரனுக...ப்ரோக்கர்கள்...விவசாயிகளுக்கு கடன் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கினவனுக.
Rate this:
Cancel
Iniyan - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-202121:20:59 IST Report Abuse
Iniyan நீதி மன்றங்கள் எப்போதும் தேச விரோதிகளும் பயங்கர வாதிகளுக்கும் அரனாவவே இருக்கிறது... இரண்டு நல்ல இந்த நீதி பதிகளுக்கு போலீஸ் காவல் விலக்கி கொள்ளுங்கள் கதை தெரியும் ....இந்திய நீதி மன்றங்கள் நாட்டில் அவமான சின்னம்
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
20-ஜன-202119:57:42 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy But they can give orders for Jallikkattu, Sabarimala case etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X