விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்குக: ப.சிதம்பரம்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என காங்., எம்.பி., ப.சிதம்பரம் கோரியுள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லைப்பகுதிகளில் கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயிகளின்
Chidambaram, FarmerProtest, FarmLaws, Start On a CleanSlate, Govt, சிதம்பரம், விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டங்கள், பேச்சுவார்த்தை

புதுடில்லி: விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என காங்., எம்.பி., ப.சிதம்பரம் கோரியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லைப்பகுதிகளில் கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் விவசாயிகள் தங்களின் கொள்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்து வருகின்றனர். எந்த சுமூக முடிவும் எடுக்கப்படாததால், இன்று (ஜன.,20) மத்திய அரசு - விவசாய சங்கங்கள் 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றன.


latest tamil news


இது குறித்து காங்., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: விவசாயிகளும் மத்திய அரசும் இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கடந்த காலத்தை ஒதுக்கிவைத்துவிட்டு புதிதாக ஒன்றைத் துவங்க மத்திய அரசு மறுக்கும்போது நாம் அவர்களிடம் எவ்வாறு நேர்மறையான பதிலை எதிர்பார்க்க முடியும்? மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் புதிதாக ஒரு பேச்சுவார்தையைத் துவங்க வேண்டும். அரசு முன்வந்து விவசாயிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அரசு முன்னோக்கிச் செல்லும் வழி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVINDRAN - CHENNAI,இந்தியா
21-ஜன-202110:29:33 IST Report Abuse
RAVINDRAN கடைசி காலத்தில் கிருஷ்ணா ராமா என SORRY இவருக்கு பிடித்தது அல்லாஹ் இயேசு பேரை சொல்லி புனியம் தேடுவதை விட்டு விட்டு இவளவு கேவலப்பட்டு பிறகும் எப்படித்தான் பேச வெட்கம் இல்லாமல் முடியுதூ.ஹிந்து தீவிரவாதம் என இந்த திஹார் பயில்வாந்தான் மோர்கனின் வோட்டு பிச்சைக்காக தொடங்கி வைத்து அகில உலக கொலையில் ஈடுபட்டு ராஜமத உடன் NATAI கெடுத்தது.எப்போது இவர் திஹார் செல்வார் என ஆவலாக உள்ளது
Rate this:
Cancel
sambath kumar - pondicherry,இந்தியா
21-ஜன-202109:52:59 IST Report Abuse
sambath kumar Keep silent & shut up your mouth, instead of talking
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
21-ஜன-202100:01:33 IST Report Abuse
spr விவசாயிகளும் மத்திய அரசும் இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. - அரசு தொடர்ந்து பேசிக்கொண்டுதானிருக்கிறது அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை சட்டத்தைத் தடை செய் என்று சொல்வதில் நியாயமில்லை அது சிறு குறைகளுடன் இருந்தாலும் நெடுநாள் கணிப்பில் நலமே தருமொன்று விவாசாயிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் மூன்று கோரிக்கைகளை சட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சொன்னாள் பிரச்சினை முடியும் அவர்கள் அரசு எத்தனை காலம் தாக்கு பிடிக்குமென்று பார்க்கவே முயலுகிறார்கள் அவர்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டு சொல்வார்களா? பத்து முறை கூட என்ன பேசினார்கள் என்பதே எவருக்கும் தெரியாது இவருக்காவது தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X