தி.மு.க.,வில் தன்னை சேர்ப்பதுடன், மகன் துரை தயாநிதிக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கணும் என்ற, மறைமுக கோரிக்கையை வலியுறுத்த தான், மதுரையில் ஆதரவாளர்களை கூட்டி அழகிரி பேச இருந்தார். ஆனால், கூட்டத்தைப் பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஸ்டாலினை வறுத்தெடுத்துவிட்டார், அழகிரி. இதனால், கடுப்பான, தி.மு.க., தலைவர்கள் அழகிரி மீது கோபமாகி, அவரை எந்த கட்டத்துலயும் ஏத்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்... அதோட, ‛அழகிரி என்ன பேசினாலும், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டக் கூடாது'ன்னு கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளாராம்...!
அதிர்ந்த இளவரசி!
சசிகலாவின் அண்ணி இளவரசி மகன்தான், ஜெயா ‛டிவி'யின் எம்.டி., விவேக்... இவருடைய மாமனார், செம்மரம் கடத்தல்ல புகழ் பெற்றவராம். சமீபத்துல இவரை ஆந்திர போலீஸார், செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்தனர். இந்தத் தகவல் ஜெயில்ல இருக்கிற சசிகலாவுக்கும், இளவரசிக்கும் போனதும், இளவரசி அதிர்ந்து போய்ட்டாங்க... தான் ஜெயிலில் இருந்து விடுதலையாகும் இந்த நேரத்தில் சம்பந்திக்கு பிரச்னையான்னு, அதிர்ச்சியாகிட்டாங்ளாம்...!
கூட்டணி முடிவில் ராமதாஸ் குழப்பம்!

கடந்த தேர்தலில் அன்புமணியை முதல்வராக அறிவித்து, தனியாக களம் கண்ட, பா.ம.க., தோல்வி அடைந்ததால், இடஒதுக்கீடு போராட்டத்தை இப்போது கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை கைவிட்டால் வன்னியர்களிடம் செல்வாக்கை இழக்க நேரிடும்னு, புலிவாலை பிடித்த கதையாக ராமதாஸ் தவிக்கிறாராம்... அதேசமயத்தில், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் அன்புமணி ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணிக்குள், பா.ம.க.,வை கொண்டு வந்தால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காதுன்னு, ஐபேக் நிறுவனமும் கூறியுள்ளது. ஆனா, இடஒதுக்கீடு விஷயத்துல, முதல்வர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்னு தெரியாததால, எந்த கூட்டணியில இருக்கிறதுன்னு தெரியாமல், ராமதாஸ் தவித்து வருகிறாராம்...!
தி.மு.க.,வின் வெற்றி கணக்கு!
ரஜினி அரசியலுக்கு வராத சூழலில் உற்சாகமா இருக்கும், தி.மு.க.,வின் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், ‛பவர் பாயிண்ட் பிரஷண்டேஷன்' கொடுத்துள்ளார். அதாவது, ஸ்டாலின், அவருடைய மருமகன் சபரீசன், டி.ஆர்.பாலு, சேகர்பாபு உள்ளிட்ட பலருக்கு மத்தியில், கட்சியின் வெற்றி நிலவரத்தை படம் போட்டு விளக்கியுள்ளார். தி.மு.க., கட்டாயம் ஜெயிக்கும், 120 தொகுதிகள், உழைத்தால் வெற்றி கிட்டும், 60 தொகுதிகள், கடுமையாக உழைத்தால் வெற்றி கிட்டும், 20 தொகுதிகள்னு பிரிச்சு பிரிச்சு, நிறைய புள்ளி விவரங்களுடன், பாடம் எடுப்பது போல் விளக்கம் கொடுத்தாராம்...!
குஷியில் நடிகை விந்தியா !
அ.தி.மு.க., துணை கொள்கை பரப்பு செயலரா இருக்கும் நடிகை விந்தியாவை, இந்தத் தேர்தலில் பிரசாரத்துக்கு முழு அளவில் பயன்படுத்திக்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக, கோவையில் தொடர்ந்து பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு வரும் விந்தியாவுக்கு, கட்சியின் எல்லா மட்ட தலைவர்களும் முக்கியத்துவம் தர்றாங்களாம்... ஒரு கூட்டத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில், சன்மானம் கொடுப்பதால், விந்தியாவும் சந்தோஷத்துல இருக்காங்க...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE