காந்திநகர்: டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் டிராகன் பழம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பழத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, இது தொடர்பாக பரிசீலனை செய்த அம்மாநில அரசு, ‛டிராகன்' பழத்திற்கு கமலம் என பெயர் சூட்டியுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், இரண்டு காரணங்களுக்காக, குஜராத்தில் டிராகன் பழம் ‛கமலம் ' என அழைக்கப்படும். அந்த பழத்தின் பெயர் சீனாவை குறிப்பதாக உள்ளது. பெயரும் பொருத்தமானதாக இல்லை. அந்த பழம் தாமரை போன்று உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், கமலம் என பெயர் சூட்டினோம். பெயர் மாற்றியதில், எந்த அரசியல்காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE