எருமைக் கதை

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஒரு கதையை படிக்கும் போது அருமையான கதை என்று மனசு சொல்லி கேட்டிருப்போம்ஆனால் இங்கே ஒரு எருமைக்கதை ஒன்றை சொல்லப்போகிறேன் மேலும் ஒரு எருமைக்கதை அல்ல முப்பத்தியேழரை எருமைக்கதைகள்,அதுவும் பாவப்பட்ட எருமைகளின் நிஜக்கதை.எல்லாம் சரி அதென்ன முப்பத்தியேழரை எருமை என்று கேட்பவர்களுக்கு, முப்பத்தியேழு முழு எருமை ஒரு கன்றுக்குட்டி ஆகவே முப்பத்தியேழரை, கணக்குlatest tamil news


ஒரு கதையை படிக்கும் போது அருமையான கதை என்று மனசு சொல்லி கேட்டிருப்போம்
ஆனால் இங்கே ஒரு எருமைக்கதை ஒன்றை சொல்லப்போகிறேன் மேலும் ஒரு எருமைக்கதை அல்ல முப்பத்தியேழரை எருமைக்கதைகள்,அதுவும் பாவப்பட்ட எருமைகளின் நிஜக்கதை.


latest tamil news


எல்லாம் சரி அதென்ன முப்பத்தியேழரை எருமை என்று கேட்பவர்களுக்கு, முப்பத்தியேழு முழு எருமை ஒரு கன்றுக்குட்டி ஆகவே முப்பத்தியேழரை, கணக்கு சரிதானே.
விஷயத்திற்குவருவோம்.
அதென்னவோ கேரளாவில் மாட்டுக்கறி என்றால் அப்படியொரு பிரியமாக சாப்பிடுகிறார்கள் மாடு என்று வந்துவிட்டால் அதில் பசுமாடு எருமைமாடு என்று எந்த பேதமும் பார்ப்பது இல்லை.
மாடு வளர்ப்பவர்கள் தங்களுக்கு ஒரு சின்ன கஷ்டம் வந்தால் கூட தாங்கள் உயிராக வளர்த்த மாட்டை அடிமாட்டுக்கு கேரளா வியாபாரிகளுக்கு விற்றுவிடுகின்றனர்.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் தமிழகத்தில் இருந்து கேரளாவை நோக்கி பல விதங்களில் சென்று கொண்டு இருப்பது வேதனையான விஷயம்.
இந்த சூழ்நிலையில் திருப்பூரின் அவுட்டர் ரோடில் லாரி ஒன்றின் டிரைவர் டீ குடிக்க வண்டியை நிறுத்தியிருக்கிறார்.
அப்போது டிரைவர் கேபினில் இருந்து ஒர எருமைக்கன்று எட்டிப்பார்த்து பரிதாபமாக கத்தியிருக்கிறது.
என்னடா இது எருமைக்கன்றை கொண்டு போய் கேபினில் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று அதிசயமாக வேடிக்கை பார்த்த மக்கள் அடுத்த நிமிடம் கன்றின் குரலுக்கு பதில் குரலாக லாரியின் பின்பக்கத்தில் இருந்து ஏாராளமான எருமை மாடுகளின் பதில் குரல் கேட்டு திகைத்துப் போனார்கள்.
பின் பக்கம் போய்ப் பார்த்தால் தலையைக்கூட திருப்ப முடியாத அளவிற்கு நெருக்கமாக முப்பத்தியேழு மாடுகள் அடைந்து கிடந்தது.சேலத்தில் இருந்து கேரளா நோக்கி போவதாகவும் அதற்கு சாப்பாடு தண்ணீர் எல்லாம் கொடுதாங்களா தெரியாது கொண்டு போய் இறக்குறது மட்டும்தான் நம்ம வேலை என்று டிரைவர் பம்மினார் பாவம் அதிககூலிக்கு ஆசைப்பட்டு வண்டி யோட்டும் டிரைவருக்கு எருமையின் நிலை எங்கே தெரியப்போகிறது.
எருமை மாடுகளின் பரிதாபத்தை பார்த்த இளைஞர்கள் சிலர் லாரியை எடுக்கவிடாமல் தடுத்து போலீசில் புகார் செய்தனர்.எருமைகளை சுமந்தபடி லாரியும் போலீஸ் நிலையம் போய்ச் சேர்ந்தது.
கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் போதிய உணவு கொடுக்கப்பட்டு நடக்கவைத்துதான் கொண்டு செல்லவேண்டும் ,அதுவும் கன்றுகள் போன்ற சிறிய மாட்டு உயிரினங்களை கொண்டு செல்லக்கூடாது, சிகிச்சைக்காக என்றால் ஆட்டோவில் ஒரு மாட்டையும் வேன் என்றால் இரண்டு மாட்டையும் லாரி என்றால் நான்கு மாட்டையும் கொண்டு செல்லலாம்.
ஆனால் இப்படி முப்பத்தியேழரை மாட்டையும் கொண்டு செல்ல எப்படி தைரியம் வந்தது என்று வெகுண்டு எழுந்த போலீசார் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஏற்கனவே பசி பட்டினியோடு இருந்த எருமைகள் போலீஸ் நிலையத்தினுள் இன்னும் அதிகம் சத்தம் போட்டன
லாரியை விட்டு இறக்கிவிட்டால் அந்த இடத்தையே கேவலப்படுத்திவிடும் என்பதுடன் யார் வேளாவேளைக்கு சாப்பாடு வாங்கிப்போடுவது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எருமைகள் பறிமுதல் செய்யப்பட்டால் வழக்கு முடியும் வரை எருமைக்கு தீனி போட்டே போலீசார் நாம் திவலாகிவிடுவோம் என்ற நிதர்சனம் போலீசாருக்கு ஏற்பட்டது.பிறகென்ன ஒவர்லோடு என்ற வழக்கு பதிவு செய்துவிட்டு உடனே அனுப்பிவிட்டனர்.
பாவம் எருமைகள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் விடுதலை கிடைக்கும், உணவு கிடைக்கும் என்று நினைத்திருந்த வேளையில் கடைசியில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கேரளாவில் உள்ளவர்களின் பசி தீர்க்க கொலைப்பசியோடு விரைந்தன.
படம்,தகவல்:திருப்பூர் அரவிந்த் குமார்.
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
24-பிப்-202111:53:20 IST Report Abuse
sankar யமனுக்கு வாஹனம் எருமை அப்போ அந்த பெரிய யமன் யாருங்க?
Rate this:
Cancel
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
10-பிப்-202101:33:04 IST Report Abuse
Ramamoorthy இவ்வாறு கேரளாவுக்கு வெட்டப்படுவதற்க்காக கொண்டுசெல்லப்படும் பசு எருது எருமை முதலிய கால்நடைகளை காப்பதற்காகவே நாங்கள் மயிலாடுதுறையில் ஸ்ரீ ஜெயம் கோசாலை பதினான்கு வருடங்களுக்கு முன் துவக்கினோம். தற்போது ஆயிரத்து நானூறு மாடுகள் உள்ளன. அவற்றில் நானூறுக்கும் மேற்பட்ட எருமைகளை உள்ளன. இறைவன் அருளால் கோசாலை நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. மேற்படி கால்நடைகளுக்கு உணவு தானம் அளிக்க விரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளவும்
Rate this:
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
10-பிப்-202112:38:35 IST Report Abuse
Ramamoorthyராமமூர்த்தி ஒன்பது நாலு நாலு நாலு இரண்டு மூன்று ஒன்பது நாலு நாலு இரண்டு...
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
23-ஜன-202112:38:54 IST Report Abuse
தமிழ்வேள் மலையாளிகள் இன்னும் மனித இறைச்சி மட்டும்தான் சாப்பிடவில்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X