சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 20, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பால் பதனிடும் முறைபிரான்சில் 1822ம் ஆண்டு டிச.,27ல் பிறந்தவர் லுாயிஸ் பாஸ்டியர். அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். துவக்கத்தில் பல்கலையில் இயற்பியல் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார். பின் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். ஆந்த்ராக்ஸ் மற்றும் ரேபிஸ் நோய்க்கு முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். மேலும் பால் பதனிடும் முறையை முதன்முதலில்

அறிவியல் ஆயிரம்
பால் பதனிடும் முறை

பிரான்சில் 1822ம் ஆண்டு டிச.,27ல் பிறந்தவர் லுாயிஸ் பாஸ்டியர். அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். துவக்கத்தில் பல்கலையில் இயற்பியல் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார். பின் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். ஆந்த்ராக்ஸ் மற்றும் ரேபிஸ் நோய்க்கு முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். மேலும் பால் பதனிடும் முறையை முதன்முதலில் கண்டறிந்தவரும் இவரே. பாலை 60 டிகிரி வெப்பநிலையில் 30 நிமிடம் காய்ச்சி, பின் வேகமாகக் குளிரச்செய்யும் இம்முறைக்கு 'பாஸ்டியர் முறை' என அழைக்கப்படுகிறது. 1895ல் மறைந்தார்.

தகவல் சுரங்கம்
இளம் கவர்னர்

இந்தியாவில் குறைந்த வயதில் மாநில கவர்னராக பதவியேற்றவர் சுவராஜ் கவுஷால். 1952 ஜூலை 12ல் டில்லியில் பிறந்த இவர் சட்டப்படிப்பு முடித்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். 34 வயதில் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என பெயர் பெற்றார். இவர் தன் 37 வயதில் மிசோரம் மாநில கவர்னராக 1990 பிப்.,8ல் பதவியேற்றார். 1993 பிப்., 9 வரை அப்பதவியில் இருந்தார். 1998 - 2004 வரை லோக்சபா எம்.பி.,யாக இருந்தார். இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X