வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்!

Added : ஜன 20, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புது டில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வரும் வேளையில், அச்சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 3-வது மாதத்தை நெருங்கி வருகிறது. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய

புது டில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வரும் வேளையில், அச்சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.latest tamil newsபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 3-வது மாதத்தை நெருங்கி வருகிறது. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சட்டங்களை பகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தர குழு அமைத்துள்ளது. அக்குழு செவ்வாயன்று கூடி விவாதித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள், விவசாய சங்கங்கள் ஆகியோரை வரும் நாட்களில் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் புதனன்று மத்திய அரசுடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம், தங்களுக்குள் குழு அமைத்து, கோரிக்கைகள் பற்றிய வரைவை சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டனர். அவற்றை திறந்த மனதுடன் அரசு விவாதிக்கும் என்று இன்றைய கூட்டத்தில் அமைச்சர் தோமர் தெரிவித்தார்.


latest tamil newsமேலும் வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கும் திட்டத்தையும் அரசு முன்மொழிந்துள்ளது. இதனை விவசாய சங்கங்கள் ஏற்றால் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது. ஆனால் விவசாய சங்க தலைவர்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஜனவரி 22-ல் நடைபெறும்

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஜன-202114:40:29 IST Report Abuse
S.Baliah Seer இந்த வேளாண் சட்டம் இயற்றப்பட்டதற்கு "பியூரியோகிராட்" என்று சொல்லப்படும் IAS அதிகாரிகளே காரணம்.இவர்கள் ஒரு அரசை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள்.இந்தியாவில் IAS என்ற சர்வீஸ் ஒழியும் வரை இந்த நாடு முன்னேறுவதற்கு வழியே இல்லை.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜன-202114:08:01 IST Report Abuse
Sridhar காலிஸ்தானிகளால் உள்ள அபாயத்தை எதிர்கொள்ள சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதென்பது சாணக்கியமாக தென்பட்டாலும், இதன் விளைவுகளும் அபாயகரமாவையே. இனி எந்த ஒரு கும்பலும் ஐம்பதாயிரம் பேருக்கு துட்டு கொடுத்து டெல்லியை சுற்றிவளைத்தால், மத்திய அரசு பணியும் என்ற எண்ணம் ஏற்படாதா? ஏன், நாளைக்கே, காலிஸ்தானிகள், தனிநாடு கோரி இவ்வாறு முற்றுகை இட்டால், அதற்கும் மத்திய அரசு இதே போல் விட்டுக்கொடுக்குமா? எடுத்த முடிவில் துணிவும் தீர்க்கமான பார்வையும் வேண்டாமா? ஒரு சிறிய கும்பலுக்கு நஷடம் ஏற்படுகின்றது என்பதற்காக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த சட்டங்களால் பயனடைவது நிறுத்திவைக்கப்படவேண்டுமா? அவர்களின் வாழ்வாதாரம் என்னவாவது? குறைந்த பட்சம் புஞ்சாபுக்கு இந்த சட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என்று சொல்லலாமே? ஏன் எல்லா விவசாயிகளுக்கும் தண்டனை?
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
21-ஜன-202112:29:59 IST Report Abuse
P Sundaramurthy விவசாயிக்கு (புரியாத) வேளாண் சட்டம் விவசாயி தவிர மற்றவர்க்கு பிடித்திருக்கிறது பெரிய அண்ணாத்த மனநிலை எதற்கும் உதவாது. உண்மையிலேயே இவை நல்ல சட்டம் என்பதை எளிதாக புரியவைக்க , பழைய மற்றும் புதிய சட்ட முறைகளை இணையாக நடைமுறைப்படுத்தலாம். ஓரிரு ஆண்டுகளில் எது நல்லது என்பதை உலகே புரிந்துகொள்ளும். அதன்பின் சிறந்ததை தேர்நதெடுத்துக்கொள்ளலாம் . இதை பின்பற்ற ஏன் தயக்கம் .
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜன-202115:26:29 IST Report Abuse
Sridharயோவ், சட்டத்தை ஒழுங்கா புரிஞ்சிகிட்டு கமெண்ட் போடுய்யா. சீர்திருத்த சட்டத்துல, விவசாயிக்கு வெளில போயி விக்க வாய்ப்புதான் கொடுத்திருக்காங்க. வெளில போயிதான், அடானிக்கிட்டயேதான் விக்கணும்னு சொல்லல. பழைய மண்டிகளும் தொடரும்னு தெளிவா சொல்ராங்க. பழசே வேணும்னா, தாராளமா விவசாயிங்க தங்களோட புரோக்கர் மூலமா, மண்டிகளிலேயே வித்துக்கலாம். அரசாங்கம் சொல்றதெல்லாம், புதுமுறைய முயற்சிபண்ணணும்ணு நினைக்கறவங்கெல்லாம் வாங்க, உங்களோட வாய்ப்பை பெறுக்கிக்கோங்க, வேண்டாதவங்க, அப்படியே இருங்கன்னுதானே சொல்லராங்க? ஆக, பஞ்சாபி விவசாயிங்க முன்னைபோலயே இருக்கலாமே? நாட்டுல மத்த மாநிலங்கள்ல இருக்கற விவசாயிங்க புது சட்டப்படி, செயல்படப்போறாங்க. பொறுத்திருந்து பாத்தா ரெண்டு வருசத்துல தெரிஞ்சு போயிடப் போகுது யாரு பயனடையறாங்க, யாரு நாசமா போங்கன்னு? இல்ல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X