பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 21, 2013மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில், 1928ம் ஆண்டு பிறந்தவர், எம்.எஸ்.உதயமூர்த்தி. அண்ணாமலை, சென்னை மற்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலையில், மருத்துவ வேதியியலில் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் உள்ள மவுன்ட் செனாரியோ கல்லுாரி, மினசோட்டா, ஐடகோ பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1982ல், 'பார்க்லே கெமிக்கல்ஸ்' எனும் நிறுவனத்தைத்


இதே நாளில் அன்று


ஜன., 21, 2013



மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில், 1928ம் ஆண்டு பிறந்தவர், எம்.எஸ்.உதயமூர்த்தி. அண்ணாமலை, சென்னை மற்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலையில், மருத்துவ வேதியியலில் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் உள்ள மவுன்ட் செனாரியோ கல்லுாரி, மினசோட்டா, ஐடகோ பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1982ல், 'பார்க்லே கெமிக்கல்ஸ்' எனும் நிறுவனத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தினார். 1987ல், இந்தியா திரும்பி, 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை துவக்கி, சமூக சேவையில் ஈடுபட்டார். 'உன்னால் முடியும் தம்பி' என,
இளைஞர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தார். செம்பனார்கோவில் பகுதியில் உள்ள நீர்நிலையை துார் வாரி, சாமானிய மக்கள் ஒன்று சேர்ந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார். இதற்கு பின், பல கிராமங்களில் மக்கள், அரசை எதிர்பார்க்காமல், தங்கள் கிராமத்திற்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். கடந்த, 2013 ஜன., 21ம் தேதி, தன், 85வது வயதில் இயற்கை எய்தினார். சமூக சேவகர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
21-ஜன-202116:35:03 IST Report Abuse
R S BALA அதிக ஆரவாரமில்லாமல் சிலர் சேவைகள் செய்வார்கள் அந்த வரிசையில் மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் ஒருவர் .. வாழ்க அவரது தொண்டுள்ளம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X