அமெரிக்காவை ஒன்றிணைப்பதே முதல் பணி

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட் வளாகமான 'கேப்பிடோல்' மீதான தாக்குதல் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி ஆகியவற்றை குறிக்கும் வகையில் ''அமெரிக்காவை ஒன்றிணைப்பதே எனது முதல் பணி. நம் நாடு தற்போதுள்ள நிலையைவிட மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்'' என அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது ஏற்புரையில் கூறியுள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக
ஒற்றுமை, ஜோ பைடன், அமெரிக்கா, அதிபர் ஜோபைடன்,

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட் வளாகமான 'கேப்பிடோல்' மீதான தாக்குதல் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி ஆகியவற்றை குறிக்கும் வகையில் ''அமெரிக்காவை ஒன்றிணைப்பதே எனது முதல் பணி. நம் நாடு தற்போதுள்ள நிலையைவிட மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்'' என அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது ஏற்புரையில் கூறியுள்ளார்.


latest tamil newsஅமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அளித்துள்ள ஏற்புரையில் அவர் கூறியுள்ளதாவது: தற்போது நாம் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் அதற்கும் ஒரு காரணம் உள்ளது. இந்த நாள் அமெரிக்காவின் நாள் ஜனநாயகத்தின் வெற்றி நாள். ஜனநாயகம் வென்றுள்ளது. மக்களின் குரல் கேட்கப்பட்டது அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது.சில நாட்களுக்கு முன் இங்கு வன்முறை நடந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடந்துள்ளது. அதற்கு இடைஞ்சல் ஏற்பட்டாலும் ஜனநாயகம் வென்றுள்ளது.நம் நாட்டின் வரலாற்றில் பல சவால்களை பார்த்துள்ளோம். அதுபோன்ற ஒரு காலகட்டத்தில் தற்போது நாம் உள்ளோம்.

கொரோனா வைரஸ் நம்மிடையே இருந்த நான்கு லட்சம் பேரின் உயிரைப் பறித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த நம் வீரர்களைவிட அதிகம் இழந்துள்ளோம்.கடந்த 1863ல் அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு தடை விதித்து அவர் கையெழுத்திட்டார். அப்போது 'வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவதாக இருந்தால் அது இந்த உத்தரவுக்காகவே இருக்கும்' என அவர் குறிப்பிட்டார்.

அவர் அந்த ஜனவரியில் கூறியதுபோல் தற்போது நான் என்னுடைய முழு உணர்வு உடல் ஆன்மா மீது உறுதியிட்டு கூறுகிறேன். நாம் அனைவரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒன்றிணைப்பது தான் என்னுடை முதல் பணியாக இருக்கும். இதில் அனைத்து அமெரிக்கர்களும் இணைய வேண்டும்.ஒற்றுமை குறித்து நான் கூறினால் அது முட்டாள்தனமாக இருப்பதாக சிலர் பேசுவர். ஆனால் உண்மையை உணர வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தை உணர வேண்டும்.அமெரிக்கா தற்போதுள்ள நிலையைவிட மிகவும் மேம்பட்டதாக இருக்க வேண்டும். இனி மேலும் இன மோதலால் சிவில் போர் நடப்பதை ஏற்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

கறுப்பின மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங் போராடிய இடம் இது. அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பின இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தற்போது பதவியேற்றுள்ளார். எதையும் மாற்ற முடியாது என்று இனியும் கூற முடியாது.இந்த உலகம் அமெரிக்காவை உற்று நோக்குகிறது. நம்மிடையை கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் அமெரிக்கர்கள். எனக்கு ஆதரவு அளிக்காதவர்களுக்கும் நான் அதிபராக செயல்டுவேன். இவ்வாறு பேசினார்.


உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்பதவியேற்பு விழாவிற்கு சில மணி நேரத்திற்கு முன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். 'கேப்பிடோல்' கட்டடம் அருகில் இருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். எனினும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21-ஜன-202114:14:14 IST Report Abuse
Allah Daniel கிழத்திற்கு தன் பெயரே அப்பப்ப மறந்திருது....
Rate this:
Cancel
21-ஜன-202111:16:48 IST Report Abuse
ஆப்பு வழக்கமான டயலாக்.. ஓபாமாவும் இதையேத்தான் பேசினாரு... எட்டு வருசம் ஓட்டுனாரு.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஜன-202105:59:42 IST Report Abuse
blocked user இடதுசாரி கொள்கையுடைய கட்சி பைடனுடையது. போர் அவர்களது வழக்கமான ஆயுதம். இந்த முறை யாருடன் மல்லுக்கட்டப்போகிறார்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X