பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தயாராகுது'புதிய படை!'

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (11+ 4)
Share
Advertisement
சென்னை :விரைவில் நடக்கவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, 'புதிய படை' தயாராகிறது. நேற்று வெளியான, இறுதி வாக்காளர் பட்டியலில், 44 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில், 3.08 கோடி ஆண்கள்; 3.18 கோடி பெண்கள் என, மொத்தம், 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலை விட, 7.68 சதவீதம், வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல், புதிய படை

சென்னை :விரைவில் நடக்கவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, 'புதிய படை' தயாராகிறது. நேற்று வெளியான, இறுதி வாக்காளர் பட்டியலில், 44 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில், 3.08 கோடி ஆண்கள்; 3.18 கோடி பெண்கள் என, மொத்தம், 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலை விட, 7.68 சதவீதம், வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 2020 நவம்பர், 16ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தப் பணி துவக்கப்பட்டது. டிச., 15 வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பெயர் சேர்க்க கோரி, 21.82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 21.39 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. பெயர் நீக்கக் கோரி வந்த, 5.09 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு போன்ற காரணங்களுக்காக, பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


மாற்றங்கள்திருத்தம் கோரி, 3.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றில், 3.09 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஒரே சட்டசபை தொகுதிக்குள், முகவரி மாற்றக்கோரி, 1.84 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றில், 1.75 லட்சம் ஏற்கப்பட்டு, உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதையடுத்து, நேற்று அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 3 கோடியே, 8 லட்சத்து, 38 ஆயிரத்து, 473 ஆண்கள்; 3 கோடியே, 18 லட்சத்து, 28 ஆயிரத்து, 727 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர், 7,246 பேர் என, மொத்தம், 6 கோடியே, 26 லட்சத்து, 74 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ளனர்.மாநிலத்தில், ஆண் வாக்காளர்களை விட, ஒன்பது லட்சத்து, 90 ஆயிரத்து, 254 பெண் வாக்காளர்கள், கூடுதலாக உள்ளனர்.


அதிகம் மற்றும் குறைவுமாநிலத்திலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி உள்ளது. இதில், 3.48 லட்சம் ஆண்கள்; 3.46 லட்சம் பெண்கள்; 107 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு, 91 ஆயிரத்து, 936 ஆண்கள்; 84 ஆயிரத்து, 281 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


அடையாளம்மாவட்டங்களில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 360 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்தில், 5.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, வெளிநாடு வாழ் வாக்காளர்கள், 47 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், 4.62 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


44 லட்சம் பேர் அதிகரிப்பு!கடந்த, 2019 லோக்சபா தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியலில், 2.95 கோடி ஆண்கள்; 3.02 கோடி பெண்கள்; 5,790 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 5 கோடியே, 98 லட்சத்து, 69 ஆயிரத்து, 758 வாக்காளர்கள் இருந்தனர்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 2.88 கோடி ஆண்கள்; 2,93 கோடி பெண்கள்; 4,720 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.எனவே, 2016 சட்டசபை தேர்தலை விட, இந்த சட்டசபை தேர்தலில், 44 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 7.68 சதவீதம், வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


மொபைல் போன் செயலிஇறுதி வாக்காளர் பட்டியல், elections.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில், படிவம் - 6 ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். www.nvsp.in என்ற, இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.'கூகுல் பிளே ஸ்டோரில்' இருந்து, ‛Voter Helpline App' எனும் மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொடர்பு மையங்களை, '1950' என்ற எண்ணிலும், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தை, 1800 42521950 என்ற, டெலிபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


புது வாக்காளர்கள்தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, 18 முதல், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், 8.97 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 4.80 லட்சம் பேர் ஆண்கள்; 4.16 லட்சம் பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kutti Ravi - coimbatore,ரூவான்டா
21-ஜன-202119:21:06 IST Report Abuse
Kutti Ravi டிசம்பரில் வந்து பெயர் எழுதிக்கொண்டு போனார்கள் ரசீது கொடுத்தார்கள் இப்ப லிஸ்டில் பெயர் இல்லை என்ன செய்வது??
Rate this:
Cancel
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
21-ஜன-202119:19:33 IST Report Abuse
Swamidoss சசிகலா பற்றி ஒன்றும் சொல்லகாணூம்
Rate this:
Cancel
Kutti Ravi - coimbatore,ரூவான்டா
21-ஜன-202118:00:19 IST Report Abuse
Kutti Ravi பி டி எப் பைலை ஒன்றும் ஓபன் செய்ய முடிவதில்லை .....சும்மா வேஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X