பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வராக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத பன்னீர்செல்வம்

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (13+ 109)
Share
Advertisement
தேனி :‛‛கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ.,வுக்குப்பின் மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை,'' என, தேனியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.தேனி மாவட்டம் போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைப்புதுார் ஊராட்சியில் தி.மு.க.,வின் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில்
பன்னீர்செல்வம் , ஸ்டாலின், தி.மு.க.,  எடப்பாடி பழனிசாமி

தேனி :‛‛கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ.,வுக்குப்பின் மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை,'' என, தேனியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தேனி மாவட்டம் போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைப்புதுார் ஊராட்சியில் தி.மு.க.,வின் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களிலும் ஆளும் கட்சியினர் அராஜகம் செய்தனர். அதனையும் மீறி 70 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். கொரோனாவால் மாநிலத்தில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காக்கும் களப்பணியில் உயிரை பணயம் வைத்து தி.மு.க., களப்பணியாற்றியது.


பணிவு கிடையாது

போடி எம்.எல்.ஏ.,வான துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பணிவு என்கிறார்கள். எம்.ஜி.ஆரின் திரைப்பாடலுக்கு ஏற்ப பதவி வரும் போது பணிவு வர வேண்டும். ஆனால் அவரிடம் பணிவு கிடையாது. சசிகலா முன்னிலையில் ஊர்ந்து வந்து முதல்வர் ஆனவர் பழனிசாமி. அவரை எடப்பாடி பழனிசாமி என யாரும் கூப்பிட்டுவிட வேண்டாம். அப்படி நீங்கள் அழைத்தால் எடப்பாடி என்ற அந்த ஊருக்கே இழுக்கு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார் துணை முதல்வர். ஆனால் அந்த ஆணையம் 8 முறை அழைத்தும் விசாரணைக்கு அவர் ஆஜராகாதது ஏன்?

இன்னும் 4 மாதங்களில் தி.மு.க., ஆட்சி வந்ததும், ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் விசாரணை மூலம் வெளிக்கொண்டு வரப்படும். யார் தவறு செய்திருந்தாலும் மக்கள் முன் நிறுத்தி கைது செய்யப்படுவர். நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டிருந்தாலும் அப்போது ஜெயலலிதா எங்களுக்கும் முதல்வராக இருந்தார். அதனால் அவரின் மரணத்திற்கு காரணமானவர்களை ஸ்டாலின் விடமாட்டான். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின் 3 முறை தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்த வில்லை, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13+ 109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
21-ஜன-202115:42:38 IST Report Abuse
Velumani K. Sundaram ஜாக்கிரதை ...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
21-ஜன-202114:10:53 IST Report Abuse
வல்வில் ஓரி இன்று 29.05.2019 தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில் ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் தமிழ்நாடு அரசு 2016இல் செய்த திருத்தம் என்பது தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான். மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. இந்த திருத்தத்தை கொண்டு வந்த .. தான் பானீர் செல்வம் இவனால் தான் நம் தமிழர் வேலை வாய்ப்பு பறிபோகிறது ஸ்டாலின் வந்தவுடன் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை என்று கொண்டு வரணும்
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
21-ஜன-202113:49:07 IST Report Abuse
வல்வில் ஓரி ஹைட்ரோகார்பன் எடுத்தே தீருவோம். எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X