பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு;'அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா - அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன். உலகின் பொதுவான சவால்களை ஒருங்கிணைந்து போராடி, உலகில் அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டுவோம். பொருளாதாரம் உட்பட இருதரப்பு உறவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வோம்', என குறிப்பிட்டுள்ளார்.
![]()
|
My warmest congratulations to Joe Biden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership: Prime Minister Narendra Modi https://t.co/DIzdGZKjj9 pic.twitter.com/50oA0r0Dl3
— ANI (@ANI) January 20, 2021
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் கூறியதாவது : அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கும், துணை அதிபரான கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்க உறவுகள் பல பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE