பொது செய்தி

இந்தியா

புதிய கொள்கை குறித்து 'வாட்ஸ் ஆப்' விளக்கம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :'எங்களுடைய புதிய கொள்கை குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளது. அது குறித்து விரிவாக விளக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த வகையிலும், தனி நபர் தகவல்களை பரிமாற மாட்டோம்.'இந்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம்' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.சமூக தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், சமீபத்தில் தன், 'பிரைவசி' எனப்படும்
 புதிய கொள்கை குறித்து 'வாட்ஸ் ஆப்' விளக்கம்

புதுடில்லி :'எங்களுடைய புதிய கொள்கை குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளது. அது குறித்து விரிவாக விளக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த வகையிலும், தனி நபர் தகவல்களை பரிமாற மாட்டோம்.

'இந்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம்' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.சமூக தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், சமீபத்தில் தன், 'பிரைவசி' எனப்படும் தனி நபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
'வரும், பிப்., 8ம் தேதிக்குள் இந்த கொள்கையை ஏற்காவிட்டால், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது' என, அந்த நிறுவனம் கூறியிருந்தது.புதிய கொள்கையின்படி, தன் பயனாளிகள் குறித்த தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.


latest tamil news




இந்த புதிய கொள்கை குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி, அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளதாவது:
புதிய கொள்கை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், செய்தி அனுப்புபவர் மற்றும் அதை பெறுபவரை தவிர, வேறு யாராலும் தகவல்களை பார்க்க முடியாது.
பயனாளிகள் குறித்த எந்தத் தகவலையும், பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். தொழில் செய்வோருக்கு உதவும் வகையில், புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாடுகள் குறித்து, இந்திய அரசு கேட்டு உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அனுப்பப்படும்.இவ்வாறு, நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
21-ஜன-202119:36:25 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy அர்நாப் கோசாமியின் பேச்சு வெளிவந்தது எப்படி?ஒன்று அது பொய் அல்லது 'வாட்ஸ்அப்பின்' உத்திரவாதங்கள் பொய் காதுகுத்தல்
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
21-ஜன-202115:44:33 IST Report Abuse
R S BALA விதிமுறையை ஏத்துக்கிட்டா இரு இல்லன்ன போய்கிட்டே இருன்னு சொல்லிட்டான் வாட்சப்க்காரன், பின்ன ஏன் பொலம்பனும் UNINSTALL பண்ணிட்டு நிம்மதியா இருங்க .. வேற ஆப் பயன்படுத்துங்க..
Rate this:
Cancel
21-ஜன-202113:27:42 IST Report Abuse
Ganesan Madurai நாங்க இனியும் உன்னய நம்ப முடியாது. ஏன்னா, ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் இதில் சலுகை ஆனா இந்தியர்களின் விபரங்களை மட்டும் மார்கெட்ல கூவி கூவி விப்பீங்க அதுக்கு நாங்க அனுமதிக்கணுமா? சுத்த அய்யோக்கியத்தனம்..வாட்ஸ்அப்யை இங்கு தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X