பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை!

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ச.குமரவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - பணி நிறைவு, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதற்காக, யாரும் அவரது ரசிகர்களாக மாறவில்லை. ரஜினியின் நடிப்பு மட்டுமின்றி, அவரது கள்ளம் கபடம் இல்லாத மனதையும்,மக்கள் நேசித்தனர். அனைவரும் அரசியலை நோக்கி

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ச.குமரவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - பணி நிறைவு, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதற்காக, யாரும் அவரது ரசிகர்களாக மாறவில்லை. ரஜினியின் நடிப்பு மட்டுமின்றி, அவரது கள்ளம் கபடம் இல்லாத மனதையும்,மக்கள் நேசித்தனர். அனைவரும் அரசியலை நோக்கி செல்கையில், ரஜினி மட்டும் தான், அதில் இருந்து விலகிச் செல்ல முயன்றார். ஆனால் காலச்சூழல், அவரை அரசியலுக்கு அழைத்தது; அதே காலச்சூழல் தான், அவரை அரசியலில் இருந்து விலக செய்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். தன்னை நம்பி அரசியலில் இறங்குவோரின் வாழ்க்கை, உழைப்பு வீணாகக் கூடாது என்று, ரஜினி நினைத்தார்.



latest tamil news



ஆனால் ரஜினி எடுத்த முடிவை, சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்ற விருப்பம் தான்! ரஜினி ரசிகனாக இருக்கும் போது ஜாதியில்லை, பேதமில்லை, ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை. அரசியல்வாதி எல்லாம், ரஜினியின் செல்வாக்கை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். அதேபோல, அரசியல் ஆதாயத்திற்காக, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்தோர், இனி வேறு கட்சிகளுக்கு மாறுவர்.


latest tamil news



அவர்களால், ரஜினி மக்கள் மன்றம் இன்னும் துாய்மை அடையும். ரஜினியை உண்மையாக நேசித்தவர், பிறரை ஒருபோதும் தன் தலைவனாக ஏற்றுக்கொள்ள மாட்டார். அரசியலில் இறங்காவிட்டால் என்ன... ரஜினி ரசிகர்கள் மக்கள் சேவையில் மகிழ்ச்சியுடன் இறங்குவர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-ஜன-202123:04:33 IST Report Abuse
Vijay D Ratnam தொடைநடுங்கிகள் அரசியலில் சாதித்ததாக சரித்திரம் இல்லை. ஸ்க்ரீனில் உதார் உடுவது வேறு. ரியாலிட்டி வேறு. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழனை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார் ரஜினி.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
21-ஜன-202121:09:34 IST Report Abuse
SaiBaba காசுக்கும் பதவிக்கும் ஆசைப்படாத எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் ரஜினி கண்களுக்குப் புலப்படவில்லையா? அவர்களை மாவட்ட செயலாளர்களாகத் தேர்வு செய்திருக்கலாமே.
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
21-ஜன-202117:14:16 IST Report Abuse
Vijay சும்மா ரஜினிக்கு ஜால்றா போடாதீங்க. அது என்ன கள்ளம் கபடம் அற்ற மனம். அப்ப உங்களை பெற்றவங்க எல்லாம் பிராடா. தன் படம் ஓட வேண்டும் தன் சம்பளம் கூட வேண்டும் என்பதற்க்காக 30 வருடமாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று மக்களை ஏமாற்றியவர் கள்ளம் கபடமற்றவரா? மக்கள் சேவை என்று வந்துவிட்டால் வயது ஒரு பொருட்டே அல்ல. காந்தி, தெரசா எல்லாம் செய்யவில்லயா? தேர்தலில் நின்றால் தோற்பது நிச்சயம் என்று தெரிந்த பின் பின்வாங்குவது எந்த விதத்தில் நியாயம். இதற்கு கமலே பரவாயில்லை. என்ன அவர் ஒரு ஹிந்து விரோதி இவர் ஹிந்துக்களுக்கு உதவவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X