பொது செய்தி

இந்தியா

போட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : 'டாடா' குழுமம், 'பிக்பாஸ்கெட்' மற்றும் 'ஒன் மில்லிகிராம்' ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளது.காபியிலிருந்து, கார் வரை தயாரிக்கும், டாடா குழுமம், அதன் அத்தனை தயாரிப்புகளையும் ஒரே செயலி மூலமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. இதன் பொருட்டு, ஆன்லைன் வினியோகத்தில் இருக்கும் சில நிறுவனங்களை

புதுடில்லி : 'டாடா' குழுமம், 'பிக்பாஸ்கெட்' மற்றும் 'ஒன் மில்லிகிராம்' ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளது.



latest tamil news



காபியிலிருந்து, கார் வரை தயாரிக்கும், டாடா குழுமம், அதன் அத்தனை தயாரிப்புகளையும் ஒரே செயலி மூலமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. இதன் பொருட்டு, ஆன்லைன் வினியோகத்தில் இருக்கும் சில நிறுவனங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக, ஆன்லைன் மளிகை வணிகத்தில் ஈடுபட்டுள்ளபிக்பாஸ்கெட் நிறுவனத்தில், முதல்கட்டமாக, 1,450 - 1,825 கோடி ரூபாயை முதலீடு செய்து, அதன் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல்,ஆன்லைன் மருந்து வினியோகத்தில் ஈடுபட்டுள்ள, மும்பையைச் சேர்ந்த, ஒன் மில்லிகிராம் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.


latest tamil news



முகேஷ் அம்பானியின், 'ஜியோ மார்ட்' மற்றும் 'அமேசான், பிளிப்கார்ட்' ஆகியவற்றின் போட்டியை சமாளிக்கும் வகையில், பல நிறுவனங்களை கையகப்படுத்த, டாடா குழுமம்திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, இந்த இரு நிறுவனங்களை கையகப்படுத்தும்முயற்சியில் இறங்கி இருக்கிறது. பிக்பாஸ்கெட் டீலை பொறுத்தவரை, மொத்தம் 8,750 கோடி ரூபாய்க்கு கைமாறும் என, துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பிக்பாஸ்கெட் நிறுவனத்தை கையகப்படுத்தியதும், அந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடவும், டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
21-ஜன-202114:29:47 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai வரட்டும், முதலாளித்துவ கார்ப்பொரேட்டுகளில் மக்களின் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள டாடா குழுமம் வந்தால் நல்லது, நாம் மிகமனமுவந்து அதர்வலிக்கலாம். நமது பணமும் அண்ணிய தேசம் செல்லாது.
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
21-ஜன-202113:50:10 IST Report Abuse
Shekar நெறைய குடிசை தொழிலை மறந்துடீங்க, கெவின் கேர், ராயல் பர்னிச்சர், ரெட் ஜெயண்ட், சன்ரைஸ்ஸ், சன் ஷைன், வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக், முரசொலி-தினகரன்-குங்குமம் பப்பிளிகேஷன்ஸ் இன்னும் பல எண்ணிலடங்கா குடிசை தொழில்கள்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்குடிசை தொழிலை ஊக்குவிக்கணும் வாழைக்காய பழுக்கும் வரை காத்திருக்காமல் கெமிக்கல் போட்டு கடைக்கு அனுப்பிடலாம் இன்ஸ்டன்ட் மணி பேக் கத்திரிக்கா கொய்யா காய கூட பத்திரமா சேதமில்லாமே நகரங்களுக்கு கொண்டு போக தெரியுமா? - காரைக்காலிலிருந்து சென்னைக்கு மீனை சேதமில்லாமே கொண்டுபோக வங்கி கடனில் 407 மாடல் வாகனம் வாங்கி கொடுத்தவன் அது ஒரு காலம் இப்போ செய்ய முடியாது செய்தா கடனை கட்ட மாட்டாங்க...
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-ஜன-202110:15:59 IST Report Abuse
pattikkaattaan முன்பிருந்தே மக்களின் நம்பிக்கையை பெற்றது டாடா நிறுவனம் ... வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இவர்கள் ஆன்லைன் வணிகம் செய்யலாம் .. விலை குறைவாக , தரமான பொருட்களை கொடுத்தால் நல்லது ..
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
21-ஜன-202112:25:26 IST Report Abuse
Shekarடாடாவின் பொருட்கள் விலை குறைவாக இருக்காது, உதாரணம், தனிஷ்க், க்ரோம், வெஸ்ட் சைடு. தாஜ் ஹோடல்ஸ். டாடா ஊழியர்களுக்கு பதினைந்து சதம் தள்ளுபடி (தனிஷ்க் தவிர) தருவார்கள், ஆனால் யாரும் அதை உபயோக படுத்துவதில்லை காரணம் வெளியில் அதைவிட குறைவாக வாங்கலாம். நானும் ஒரு முன்னாள் டாடா ஊழியன்...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறாரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X