சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்:-1. கொள்ளை போன ரூ.76 லட்சம் 15 மணி நேரத்தில் மீட்பு: 5 பேர் கைதுநாகர்கோவில்:தக்கலை அருகே காரில் கொண்டு வந்து கொண்டிருந்த போது கொள்ளை போன 76 லட்சம் ரூபாய் 15 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கோபகுமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.2. இலங்கை கடற்படை கொடூரத்தால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலைராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் படகை இலங்கை

தமிழக நிகழ்வுகள்:-
1. கொள்ளை போன ரூ.76 லட்சம் 15 மணி நேரத்தில் மீட்பு: 5 பேர் கைது
நாகர்கோவில்:தக்கலை அருகே காரில் கொண்டு வந்து கொண்டிருந்த போது கொள்ளை போன 76 லட்சம் ரூபாய் 15 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கோபகுமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.



latest tamil news



2. இலங்கை கடற்படை கொடூரத்தால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை
ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்ததில், 4 மீனவர்கள் உயிரிழந் திருக்கலாம் என ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலர் சகாயம் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரது உடல் கரை ஒதுங்கியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
3. தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரம்; வளவனுார் அருகே கூலி தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.


latest tamil news



4. கஞ்சா விற்ற வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
5. ஆன்லைன் தொழில் மோசடி கோடிகள் சுருட்டியவர் கைது
கோவை : ஆன்லைன் தொழில் செய்வதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர். பலரையும் நம்ப வைத்து, 2 கோடி 60 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார்.


latest tamil news



6. மானிய உரம் கடத்தினால் 7ஆண்டு சிறை
கோவை : விவசாய பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படும் மானிய உரங்களை, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7. ரூ.1.86 கோடி மோசடி வங்கி மேலாளர் கைது
உளுந்துார்பேட்டை:திருக்குவளை வங்கியில், 1.86 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.


latest tamil news



இந்தியாவில் குற்றம்:-
'மாடலிங்' பெண்கள் மீட்பு
மும்பை: மஹாராஷ்டிராவின் மேற்கு மும்பையில் ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓட்டலில் 'மாடலிங்' பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் எட்டு பெண்களை மீட்டதுடன் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற மூன்று நபர்களை கைது செய்தனர்.


உலக நடப்பு !


இந்தோனேஷியாவில் மாஸ்க் அணியாமல் சென்ற சுற்றுலா பயணிகள் தண்டால் மற்றும் ஸ்கோடு போட சொல்லி பணிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X