வெள்ளை மாளிகையில் பணிகளை துவங்கினார் ஜோ பைடன்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் நேற்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் ராணுவ

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது.



latest tamil news



அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் நேற்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் ராணுவ குழுக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மரியாதையுடனும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்று இறந்த வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


latest tamil news



இந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை சென்று தனது அலுவலக பணிகளை பைடன் துவங்கினார்.


latest tamil news



பதவியேற்பு விழா தொடர்பாகவும் சில முக்கிய அரசு ஆவணங்களிலும் ஜோ பைடன் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உட்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




முன்னதாக ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நெருக்கடியை சந்திக்கும் நிலைகளில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, விரைவாக பணிகளை துவங்க ஓவல் அலுவலகம் செல்கிறேன், அமெரிக்கர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்க உள்ளேன் என கூறியிருந்தார்.


15 முக்கிய கோப்புகளில் கையெழுத்து:

அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், 15 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இந்தச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான செயல்முறையைத் தொடங்கும் திட்டங்களுக்காகவும் பைடன் கையெழுத்திட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவை., தூத்துக்குடி மாவட்டம்,இந்தியா
21-ஜன-202119:28:30 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா வந்தன்னைக்கே முஸ்லீம் நாடுகள் மீதான தடையை நீக்கியாச்சு. கொஞ்சநாள் கழிச்சி அவன் குண்டுவைப்பான். இவனுங்க உடனே புதுசா கண்டுபிடிச்ச ராணுவ தளவாடங்களை அதே இஸ்லாமிய நாட்டு மக்கள் மேல போட்டு சோதனை செய்வாங்க.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-202110:57:33 IST Report Abuse
முக்கண் மைந்தன் சவடால்ல காலத்தெ ஓட்டாமெ வந்தன்னிக்கே காரியத்துல எறெங்கிட்டாரு புது அதிபரு
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-202107:50:29 IST Report Abuse
Bhaskaran அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஏதேனும் நன்மை செய்யுங்கள் .பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X