அந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்கனும்; இந்த அனல் மின் நிலையத்தை, இந்த ஜாதிக்கு பட்டா போட்டு கொடுக்கனும் என, சொல்லாமல் விட்டதற்கு நன்றி.

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கல்பாக்கம், தாராப்பூர் அணு மின் நிலையங்களில், இன்ஜினியரிங் படித்தவர்களில், 50 பேருக்கும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., படித்தவர்களில், 110 பேருக்கும், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவது தேவையற்றது. அந்தப் பணியிடங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரப்ப, மத்திய அரசு முன்வர வேண்டும்.- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்'நல்லவேளை, அந்த அணு உலையை, இந்த
ராமதாஸ், அழகிரி,திருமாவளவன், முத்தரசன், விக்கிரமராஜா, ராமச்சந்திரன்

கல்பாக்கம், தாராப்பூர் அணு மின் நிலையங்களில், இன்ஜினியரிங் படித்தவர்களில், 50 பேருக்கும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., படித்தவர்களில், 110 பேருக்கும், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவது தேவையற்றது. அந்தப் பணியிடங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரப்ப, மத்திய அரசு முன்வர வேண்டும்.
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


'நல்லவேளை, அந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்க வேண்டும்; இந்த அனல் மின் நிலையத்தை, இந்த ஜாதிக்கு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என, சொல்லாமல் விட்டதற்கு நன்றி...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.தமிழகத்தில், 14 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் சேத விபரத்தை அதிகாரிகள் விரைவாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
- தமிழக காங்., தலைவர் அழகிரி


'இதெல்லாம், அரசு அதிகாரிகளின் கடமை; அவர்கள் பார்த்துக் கொள்வர். தி.மு.க., கூட்டணியில் இடம் பிடிக்க ஏதாவது முதலில் செய்யுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயம் என்ற முறையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், தற்போது இட ஒதுக்கீடு வழங்க, சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை நன்றாக தெரிந்திருந்தும், ராமதாஸ் கோரி வருகிறார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்களா, ராமதாசை சாடுகிறீர்களா என தெரியவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், 200 நாட்கள் பணி வழங்க வேண்டும்.
- இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்


latest tamil news
'எல்லாம் சரி. போராடும் விவசாயிகளை, எப்போது விவசாயம் செய்ய விடுவீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி.தமிழகத்தில், 17 சதவீத ஓட்டு வங்கி கொண்ட வணிகர்களை, ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக வணிகர்கள் இருப்பர்.
- வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா


'பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேட்டியை, 'டிவி'யில் பார்த்த உடன், இந்த பேட்டியை கொடுக்கிறீர்களோ; அவர் போலவே பேசுகிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி.கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை கண்டறிந்து, கடந்த, நான்காண்டுகளாக அவை மீட்கப்பட்டு, கோவிலுக்கு சொந்தமாக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அமைச்சர் ராமச்சந்திரன்


'அப்போ, இதற்கு முன், அதிகாரிகள் துாங்கிக் கொண்டிருந்தனரா அல்லது கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்க, உறுதுணையாக இருந்தனரா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-ஜன-202107:22:40 IST Report Abuse
natarajan s ஏற்கனவே நெய்வேலியில், அண்ணாமலை பல்கலையிலும் இவர் கண்ணசைவின்றி எந்த நியமனமும் நடப்படதில்லை . எல்லாம் வசூல்தான்.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
22-ஜன-202100:19:32 IST Report Abuse
naadodi ராமதாஸ் தமிழகத்தின் டிரம்ப்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-ஜன-202118:54:34 IST Report Abuse
கல்யாணராமன் சு.ஏன் டிரம்ப்பை திட்டறீங்க ???...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-ஜன-202121:04:15 IST Report Abuse
Rajagopal இந்த மாதிரி சாதிகளுக்கு வேலைகள் கொடுத்து, அதன் மூலமாக அரசியல் லாபம் சம்பாதிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சாதிகள் பின்னடைவாக இருக்கும் வரை இவர்கள் ஆதாயம் அடைவதை நிறுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக, தாழ்ந்த சாதியினருக்கு, தொழில் செய்ய பயிற்சி கொடுத்து, குறைந்த வட்டியில் கடன்கள் கொடுத்து, ஊக்கம் அளித்து, தங்கள் கால்களில் நிற்க வைத்தால் அவர்களது பொருளாதாரம் வளரும். படிப்புத்திறன் தானாக வளரும். சாதிகள் ஒரு காலத்தில் தொழில் நுட்பத்தால் வலமாக இருந்தவை. சாதிகள் மறையப்போவது இல்லை. அப்படி எவனும் சொன்னால் அவன் சொல்வது பெரும் பொய். பொருளாதார வளர்ச்சிதான் எல்லாவற்றையும் மாற்றும். இதற்கு நேர் உதாரணம், நமது நாடார்களின் சாதி. அவர்கள் ஒரு காலத்தில் நுங்கு இறக்கும் வேலையில் இருந்தவர்கள். ஆனால் அவர்கள் தீப்பெட்டி செய்வது, பட்டாசு உற்பத்தி, பிரின்டிங் தொழில், லித்தோ பிரஸ் என்று பல தொழில்களில் வளர்ச்சி பெற்று இன்று பொருளாதார ரீதியாக உன்னதமான நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்தியா சாதி அரசியலை ரத்து செய்ய வேண்டும். இந்த எழுபத்தி சொச்சம் ஆண்டுகளில் தாழ்ந்த சாதியினருக்கு வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. அவர்களை வைத்து அரசியல் செய்யும் குண்டர்கள் கொழுத்து வளர்ந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை. சாதி அரசியலை வைத்து, மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X