சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால் தினகரன் ஆபிஸ்களில் 'ரெய்டு'

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (82+ 228)
Share
Advertisement
சென்னை: 'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல் படுகின்றன.இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு
பால்தினகரன், வருமான வரித்துறை, ரெய்டு

சென்னை: 'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல் படுகின்றன.இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகார் வருமான வரித் துறைக்கு வந்தது.இதனால் பால் தினகரனுக்கு சொந்தமாக சென்னை கோவை உட்பட 25 இடங்களில் உள்ள கட்டடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை பாரிமுனை அடையாறு ஜீவரத்தினம் நகர் வீடு ஆர்.ஏ.புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்கள்; கோவை காருண்யா பல்கலை உட்பட பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்தது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அறக்கட்டளைக்கென தனி வரி விலக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட வரி விலக்கில் விதி மீறல்கள் நடந்திருந்தால் அதுவும் வரி ஏய்ப்பாகவே கருத்தப்படும். இயேசு அழைக்கிறார் அமைப்பிலும் வரி ஏய்ப்பு புகாரில் தான் சோதனை நடைபெறுகிறது.சோதனையில் 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. முழுமையான விபரங்கள் சோதனை முடிந்த பின் தெரிய வரும்; சோதனை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


காருண்யா பல்கலையில் வருமான வரி சோதனை! கோவையில் அதிகாலை முதல் அதிகாரிகள் 'அதிரடி''இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர், கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான சென்னை அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலை உள்பட, 28 இடங்களில் நேற்று அதிகாலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.கோவை காருண்யா பல்கலையில் நேற்று அதிகாலை, 5.30 மணியளவில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட துவங்கினர். பல்கலையின் மைய அலுவலகம், பல்கலை வளாகத்திலுள்ள அதிகாரிகளின் வீடுகள், ஊழியர்கள் குடியிருப்பு என, அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக, கோவை, கரூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 22 கார்களில், 120க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். பல்கலையின் மைய அலுவலகத்தில் மட்டும், 40 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


latest tamil news

10 இடங்களில் 'ரெய்டு'


பல்கலையில் நிதி நிர்வாகங்களில் பணியாற்றும் அலுவலர்களின் ஒவ்வொருவர் வீட்டுக்கும், ஐந்து அதிகாரிகள் என்று பிரிந்து சென்று சோதனையிட்டனர். அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களின் மொபைல்போன்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து, யாரையும் வெளியேஅனுப்ப அனுமதிக்கவில்லை.தொடர்ந்து, பால் தினகரனுக்கு சொந்தமான இரண்டு பள்ளிகள், மருத்துவமனை, 'இயேசு அழைக்கிறார்' நிகழ்ச்சி நடத்தப்படும் மண்டபங்கள் என, கோவையில் மட்டும், 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி, பல்கலை அதிகாரிகளிடமும் மைய அலுவலகத்தில் வைத்து வருமான வரித்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல் குறித்து வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை. சோதனை முழுமையாக முடிந்ததும் முழு தகவல் தெரிவிக்கப்படும் என, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

'இயேசு அழைக்கிறார்' குழுமத்துக்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, புகார் வந்ததாகவும், இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு தமிழகம் உள்பட உள்நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது.வருமான வரி சோதனை காரணமாக, காருண்யா பல்கலை மற்றும் சுற்று பகுதிகளிலும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


latest tamil news

நுழைவுவாயிலில் அனுமதி மறுப்பு


காருண்யா பல்கலைக்கு நேற்று அதிகாலை, 5.30 மணியளவில், 22 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அணிவகுத்து வந்தனர். இவர்களை பல்கலை முன் நுழைவு வாயிலில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுதாரித்த அதிகாரிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து, அதிகாலை முதலே அலுவலக பணியாளர்கள், ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை துவக்கினர். சோதனையின்போது அங்கிருந்த பணியாளர்கள் தங்களை வெளியே அனுப்புமாறு கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின், அவர்களின் மொபைல்போன்களை வாங்கிய அதிகாரிகள், தோட்ட பணியாளர்கள் உள்ளிட்டோரை மட்டும் வெளியே செல்ல அனுமதித்தனர்.


சோதனைக்கு பின் முழுவிபரம்


சோதனை குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அறக்கட்டளைக்கென தனி வரி விலக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட வரி விலக்கில், விதிமீறல்கள் நடந்திருந்தால், அதுவும் வரி ஏய்ப்பாகவே கருதப்படும். இயேசு அழைக்கிறார் அழைப்பிலும், வரி ஏய்ப்பு புகாரில் தான் சோதனை நடைபெறுகிறது.
சோதனையில், 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள்சிக்கியுள்ளன. முழுமையான விபரங்கள், சோதனை முடிந்த பின் தெரியவரும். சோதனை தொடரும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (82+ 228)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Minku Pinku - coimbatore,இந்தியா
22-ஜன-202100:05:06 IST Report Abuse
Minku Pinku IT officers, இன்னும் என்ன செய்துகிட்டு இருக்கீங்க ????
Rate this:
Cancel
சோலைபட்டி பார்த்திபன் 28 இடங்களில் ரெய்டு..... அப்படின்னா..... அரசாங்கதிற்கு தெரியாமல்......... எத்தனை பினாமிகள் உள்ளனரோ.....மத பிரசங்கம் செய்யும் உன்ன கிட்டயே இவ்வளவு சொத்து அப்படின்னா......பாதரிகள்...அதான் பதர்கள் கிட்ட எவ்வளவு கொட்டி கிடைக்குதோ....யார் கண்டது...இறைவனுக்கே வெளிச்சம்.....
Rate this:
Cancel
Mohan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-202122:16:23 IST Report Abuse
Mohan what about Sekar reddy's 2000 new notes forgery IT raids.... No results. What about Tamilnadu Ministers (Modi Slaves) IT raids....No results
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X