பொது செய்தி

இந்தியா

சரித்திரம் படைத்த 'சென்செக்ஸ்' : 50 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: வரலாற்று சாதனையாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' நேற்று வர்த்தகத்தின் இடையே, 50 ஆயிரம் புள்ளிகளை முதன் முறையாகத் தாண்டியது.தேசிய பங்குச் சந்தை உலக சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், சென்செக்ஸ் இந்த உச்சத்தை
சென்செக்ஸ், மும்பை பங்குச்சந்தை, உயர்வு, நிப்டி,

மும்பை: வரலாற்று சாதனையாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' நேற்று வர்த்தகத்தின் இடையே, 50 ஆயிரம் புள்ளிகளை முதன் முறையாகத் தாண்டியது.


தேசிய பங்குச் சந்தை


உலக சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், சென்செக்ஸ் இந்த உச்சத்தை தொட்டுள்ளது.வர்த்தகத்தின் இடையே, 50126.73 எனும் உச்சத்தை, சென்செக்ஸ் தொட்டது. இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி'யும், வர்த்தகத்தின் இடையே, 14738.30 புள்ளிகளை முதன் முறையாக தொட்டது.


latest tamil news



இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில், லாபத்தை எடுப்பதற்காக, அதிகளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, சென்செக்ஸ், நிப்டி ஆகியவை உச்சத்திலிருந்து கீழிறங்கி, முடிவுக்கு வந்தன. சென்செக்ஸ், 49624.76 புள்ளிகளிலும், நிப்டி, 14590.35 புள்ளிகளிலும் நிலைபெற்றது.


பொருளாதார வளர்ச்சி


சந்தையின் இந்த எழுச்சி தொடருமா அல்லது சரியுமா என்பது குறித்து, பல்வேறு கருத்துக்கள் சந்தையில் நிலவுகின்றன.அதிகரிக்கும் அன்னிய முதலீடு தொடர்வது, ரூபாய் மதிப்பு அதிகரிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்வது ஆகியவற்றை பொறுத்து, சந்தைகள் இந்த சரித்திர சாதனையை மேலெடுத்து செல்லுமா, இல்லையா என்பது தெரியவரும் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜன-202116:00:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஆனால் முடிகிற நேரத்தில் வீழ்ச்சி கண்டது காரணம் இதுதான்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஜன-202111:46:56 IST Report Abuse
Malick Raja இதனுடைய தாக்கம் வெகுவாக ஏழைகளையும் நடுத்தர சிறிய பணக்காரர்களுக்கும் வெகுவாக இருக்கும் .. ஊக வணிகம் ஊருக்கும் நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பெரிய பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் என்பது மிகப்பெரும் உண்மை .. அறிவிலிகள் மட்டுமே இதை ஆதரிப்பார்கள் .. ஆமோதிப்பார்கள் .. உழைக்காமல் உன்னும் இம்முறை ஒழிந்தால் மட்டுமே நாடு மேம்படும்
Rate this:
Balaji - Chennai,இந்தியா
21-ஜன-202114:09:25 IST Report Abuse
Balajiஎன்ன பேத்தல்... இது எதற்க்காக ஏழையை பாதிக்கும்?...
Rate this:
21-ஜன-202117:08:58 IST Report Abuse
ஆரூர் ரங்ஊக வணிகம் செய்பவர்கள் அன்றன்றே செட்டில் செய்துவிடுவார்கள். அதனாலெல்லாம்👍🏻 400 நாளில் 10000 👍🏻புள்ளிகள் ஏறாது...
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
21-ஜன-202111:26:37 IST Report Abuse
Rameeparithi பங்கு சந்தை எழுச்சி, சந்தோசமே இந்திய ரூபாய் வீழ்ச்சி, வருத்தமே, ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X