கோவை: சசிகலாவை அதிமுக.,வில் சேர்த்துக்கொள்ள பா.ஜ., வற்புறுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டசபை தேர்தலில் எங்களுக்கான தொகுதிகளை திமுக.,விடம் கேட்டு பெறுவோம். சசிகலாவை அதிமுக.,வில் சேர்த்துக்கொள்ள பா.ஜ., வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. அதிமுக.,வில் யாரை சேர்க்க வேண்டும் என வேறு கட்சி முடிவு செய்யும் நிலையில் தான் எம்ஜிஆர் துவங்கிய அதிமுக உள்ளது. சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

3வது அணி என்பதை காங்., விரும்பவில்லை. 3வது அணி அமைப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்துவிடக்கூடாது. திமுக கூட்டணிக்கு கமலை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஆனால் கமல் கூட்டணிக்குள் வருவதற்கு வரவேற்கிறோம். கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டுவங்கி பாதிக்கப்படாது. ராஜிவ் குற்றவாளிகளை விடுதலை செய்வது நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிமன்றம் விடுதலை செய்தால் அதை காங்., எதிர்க்காது ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE