ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன் கோவில் அருகே பாட்டக்குளத்தை சேர்ந்தவர் ஷீலா(27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அம்சத்குமாரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், ஷீலாவை திருமணம் செய்ய அவரது அக்கா பெயரில் உள்ள இடத்தை எழுதி கேட்டார். எழுதி கொடுத்த பின்பும், 20 பவுன் நகை,ஒரு லட்சம் ரூபாய் தந்தால் திருமணம் செய்வதாக கூறினார். இதனிடையே, சுந்தரராஜபுரத்தை சேர்ந்த மணிமேகலையை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீவி., பெண்கள் போலீசார் அம்சத்குமார், தங்கராஜ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தங்கராஜை கைது செய்தனர்.