சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மிளகாய் தரும் மின்சாரம்!

Added : ஜன 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூரிய வெப்பத்திற்கும், மிளகாய்க்கும் முன்பே ஒரு தொடர்பு உண்டு. பச்சை மிளகாய் வெயிலில் காய்ந்தால் வர மிளகாய் கிடைக்கும். தற்போது இன்னொரு தொழில்நுட்ப தொடர்பும் சூரியனுக்கும், மிளகாய்க்கும் ஏற்பட்டுள்ளது.சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை செய்ய, 'பெரோவ்ஸ்கைட்' என்ற புதுவகை தாது பயன்படுகிறது. சிலிக்கானுக்கு மாற்றாக வந்துள்ள இதன் செயல்பாட்டை
 மிளகாய் தரும் மின்சாரம்!

சூரிய வெப்பத்திற்கும், மிளகாய்க்கும் முன்பே ஒரு தொடர்பு உண்டு. பச்சை மிளகாய் வெயிலில் காய்ந்தால் வர மிளகாய் கிடைக்கும். தற்போது இன்னொரு தொழில்நுட்ப தொடர்பும் சூரியனுக்கும், மிளகாய்க்கும் ஏற்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை செய்ய, 'பெரோவ்ஸ்கைட்' என்ற புதுவகை தாது பயன்படுகிறது. சிலிக்கானுக்கு மாற்றாக வந்துள்ள இதன் செயல்பாட்டை அதிகரிக்க, மிளகாயின் காரத்திற்கு மூலமாக இருக்கும், 'கேப்சைசின்' என்ற பொருளை பயன்படுத்தலாம் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரோவ்ஸ்கைட் தாதுவை சூரிய ஒளி மின்தகடாக மாற்றும்போது, அதன் வேதிச் சமநிலையின்மையால் விரைவில் வெப்பமடைகிறது. இதை தடுக்க, சிலிக்கன் போன்ற பிற தாதுக்களை கலந்தே பெரோவ்ஸ்கைட் தகடுகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் தயாரித்தனர். அத்தகைய கலவைக்கு கேப்சைசினை சேர்த்தால், அந்த தகடுகள் வேதியல் ரீதியாக உறுதியடைவதுடன், கூடுதலாக மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

இந்த ஆய்வு, 'ஜூல்' இதழில் வெளியாகியுள்ளது.இயற்கையில் கிடைக்கும் தாதுவுடன், இயற்கையில் விளையும் மிளகாய் சேரும்போது நடக்கும் இந்த விந்தையால், சூரிய மின் ஒளி உலகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202119:43:54 IST Report Abuse
J.V. Iyer 'பெரோவ்ஸ்கைட்' செய்ய காரீயம் தேவை. இந்த காரீயம் ஒரு நச்சு உலோகம். இதை தடை செய்து அறுவது ஆண்டுகள் ஆகிவிட்டன. இது திமுகவை போல மீண்டும் வருவது கவலைக்கு உரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X