சூரிய வெப்பத்திற்கும், மிளகாய்க்கும் முன்பே ஒரு தொடர்பு உண்டு. பச்சை மிளகாய் வெயிலில் காய்ந்தால் வர மிளகாய் கிடைக்கும். தற்போது இன்னொரு தொழில்நுட்ப தொடர்பும் சூரியனுக்கும், மிளகாய்க்கும் ஏற்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை செய்ய, 'பெரோவ்ஸ்கைட்' என்ற புதுவகை தாது பயன்படுகிறது. சிலிக்கானுக்கு மாற்றாக வந்துள்ள இதன் செயல்பாட்டை அதிகரிக்க, மிளகாயின் காரத்திற்கு மூலமாக இருக்கும், 'கேப்சைசின்' என்ற பொருளை பயன்படுத்தலாம் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரோவ்ஸ்கைட் தாதுவை சூரிய ஒளி மின்தகடாக மாற்றும்போது, அதன் வேதிச் சமநிலையின்மையால் விரைவில் வெப்பமடைகிறது. இதை தடுக்க, சிலிக்கன் போன்ற பிற தாதுக்களை கலந்தே பெரோவ்ஸ்கைட் தகடுகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் தயாரித்தனர். அத்தகைய கலவைக்கு கேப்சைசினை சேர்த்தால், அந்த தகடுகள் வேதியல் ரீதியாக உறுதியடைவதுடன், கூடுதலாக மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.
இந்த ஆய்வு, 'ஜூல்' இதழில் வெளியாகியுள்ளது.இயற்கையில் கிடைக்கும் தாதுவுடன், இயற்கையில் விளையும் மிளகாய் சேரும்போது நடக்கும் இந்த விந்தையால், சூரிய மின் ஒளி உலகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE