விண்வெளியில் கருந்துளைகளைப் பற்றிய ஒரு புது கண்டுபிடிப்பு ஆச்சரியமூட்டுகிறது. கருந்துளைகள், அவற்றின் பெயருக்கு நேர்மாறாக, அவ்வப்போது ஒளியை வெளிப்படுத்துவதுண்டு. குறிப்பாக, அவை நட்சத்திரங்களை கபளீகரம் செய்யும்போது பிரகாசமான ஒளி வெளிப்படும். இதுபோன்ற, 'தரமான சம்பவம்' மிக அரிதாகவே அரங்கேறும்.
ஆனால், அண்மையில், ஒரு கருந்துளை, 114 நாட்களுக்கு ஒரு முறை, அதிக வெளிச்சத்தை உமிழ்வதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமியிலிருந்து, 570 மில்லியன் ஒளியாண்டு தொலைவில், இந்த அதிசயம் நிகழ்வதை விண்வெளி விஞ்ஞானிகள், 2014 நவம்பரிலேயே கண்டறிந்தனர்.
ஆனால், 'அசாஸ்ன்-14கேஓ' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கருந்துளை, குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஒளியை உமிழ்கிறதா என்பதை, 2020ஆம் ஆண்டு முழுதும் விஞ்ஞானிகள் கண்காணித்தனர். அவர்கள் எதிர்பார்த்த படியே மே 17, செப்டம்பர் 7 மற்றும் டிசம்பர் 26 என்று சரியாக, 114 நாட்கள் இடைவெளிகளில் அசாஸ்ன் கருந்துளையிலிருந்து ஒளி வெளிப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள், 'அஸ்ட்ரோ பிசிகல் ஜர்னல்' இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE