பொது செய்தி

தமிழ்நாடு

21... 21... 21... : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் டிரெண்ட் ஆகின்றன. அந்தவகையில் இன்றைய தேதியான 21.01.2021ஐ, 21ம் தேதி, 21வது ஆண்டு, 21ம் நூற்றாண்டு என டிரெண்ட் செய்து வருகின்றனர். வருடத்தில் எப்போதாவது தேதி, மாதம், ஆண்டு என ஒன்றாக வரும். சில சமயம் ஆண்டு தொடங்கி தேதி வரை ஒன்றாக வரும். இதை சமூகவலைதள வாசிகள் அவ்வப்போது சுட்டிக்காட்டி அதை வைரல் ஆக்குவார்கள். அந்தவகையில் இன்றைய தேதியும்
Todayisthe21st, 21stCentury, 21,

சென்னை : டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் டிரெண்ட் ஆகின்றன. அந்தவகையில் இன்றைய தேதியான 21.01.2021ஐ, 21ம் தேதி, 21வது ஆண்டு, 21ம் நூற்றாண்டு என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வருடத்தில் எப்போதாவது தேதி, மாதம், ஆண்டு என ஒன்றாக வரும். சில சமயம் ஆண்டு தொடங்கி தேதி வரை ஒன்றாக வரும். இதை சமூகவலைதள வாசிகள் அவ்வப்போது சுட்டிக்காட்டி அதை வைரல் ஆக்குவார்கள். அந்தவகையில் இன்றைய தேதியும் வைலராகி உள்ளது. தற்போது நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். அதோடு இன்றைய தேதி 21, மற்றும் ஆண்டு 2021, இதை சுருக்கமாக 21 என கூறி வருகிறோம். ஆகவே இன்றைய தினம் தேதி, ஆண்டு, மற்றும் நூற்றாண்டு ஆகியவை 21 என்ற எண்ணில் வந்துள்ளது. இதை குறிப்பிட்டு சமூகவலைதளமான டுவிட்டரில் "21st Century", "Today is the 21st" ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.


latest tamil news
இன்றைய தினம் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பிறந்த தினமும் கூட. இதையும் சுட்டிக்காட்டி இந்த ஹேஷ்டாக்குகளில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு சுஷாந்த் சிங் பிறந்தநாள் #SushantDay, #ssrbirthday ஆகிய ஹேஷ்டாக்குகளிலும் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.

''இன்றைய தினத்தை கவனித்தீர்களா. 21ம் நாள், 21ம் ஆண்டு, 21ம் நூற்றாண்டு. அதோடு நமது அன்பிற்குரிய மறைந்த சுஷாந்த் சிங்கின் பிறந்த தினமும் இன்று''. ''என்ன ஒரு அற்புதமான நாள். சுஷாந்த் பிறந்தநாளில் இந்த அற்புத நாள் வந்துள்ளது மகிழ்ச்சி''. ''இன்றைய நாள் நமது வாழ்வின் மிகவும் தனித்துவமான நாள்'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இப்படி ஒரு தினம் வந்ததால் என்ன நடந்தது, இதுவும் வழக்கமான ஒரு நாள் தான், இதை கொண்டாட ஒன்றும் இல்லை என சிலர் எதிர் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Subbiah - Coimbatore,இந்தியா
21-ஜன-202121:52:40 IST Report Abuse
V Subbiah This day is really very special. The first 21 is not date. It is the day 21 of the year 21 in the century 21. This will not happen again in this century.
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
21-ஜன-202117:00:21 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam அப்படி என்றால் 21 ஒவ்வொரு மாதமும் நிகளும் இது ஒன்றும் அதிசயமல்லவே, அது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நூற்ராண்டும் இது நிகளும் சாதாரண விஷயம்.....
Rate this:
Karthik - Doha,கத்தார்
21-ஜன-202120:03:51 IST Report Abuse
Karthikஎதையோ அவித்துவிட்டுட்டே இருக்கணும் போல. இதெல்லாம் ஒரு நியூஸ். ஒரு கும்பல் whatsappலும் பரப்பிக்கிட்டிருக்கு,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X