பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் கட்ட கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.,எம்.பி.,கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது. நிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை ஆர்எஸ்எஸ்
ராமர்கோயில், ராமர்கோவில், கவுதம்காம்பீர், நன்கொடை, பாஜ, எம்.பி.,gautam ghambir, Ramar Temple,

புதுடில்லி:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.,எம்.பி.,கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது. நிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கியுள்ளது. டில்லி மாநில பாஜ.,வும் நிதி திரட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளது. இதற்காக ரூ.10, 100,1,000 மதிப்புள்ள கூப்பன்களை தயாரித்து வீடுகளில் வழங்கி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜ.,எம்.பி., கவுதம் காம்பீர், தனது பங்களிப்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிறப்பான ராமர் கோவில் கட்டப்படுவது என்பது அனைத்து இந்தியர்களின் கனவு. நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக சிறிய தொகை பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202106:56:37 IST Report Abuse
இராமன் நன்றி காம்பிர். நீங்க ஒரு கோடி. எங்களுடைய பங்கு ஒரு இலட்சம். ஜெய் ஸ்ரீ இராம.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஜன-202105:38:54 IST Report Abuse
 Muruga Vel பதினோரு கோடி கொடுத்த முராரி பாப்பு பற்றி சொல்லக்காணோமே ...
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
21-ஜன-202121:56:58 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy பாஜ.,எம்.பி., கவுதம் காம்பீர் வீரர் , தீரர்........... பயந்த திராவிட தமிழ் அரசியல் தலைவர் அல்லர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X