பொது செய்தி

இந்தியா

மோடி எப்போது தடுப்பூசி எடுத்துக்கொள்வார்? அதிகாரிகள் தகவல்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புது டில்லி: பொது மக்களுக்கு தடுப்பூசி திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ள மார்ச் அல்லது ஏப்ரல் காலக்கட்டத்தில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று உயர்மட்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தற்போது 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இரண்டாம் கட்டமானது

புது டில்லி: பொது மக்களுக்கு தடுப்பூசி திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ள மார்ச் அல்லது ஏப்ரல் காலக்கட்டத்தில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று உயர்மட்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



மத்திய அரசு தற்போது 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இரண்டாம் கட்டமானது மார்ச் மாதம் துவங்க உள்ளது. அப்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், பல்வேறு நோய் உள்ளவர்கள் என 27 கோடி பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். 70 வயதாகும் மோடி இந்த குழுவில் பங்கேற்கக் கூடும் என்று தடுப்பூசி திட்டத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


latest tamil news



பிரதமரே இந்த முடிவு எடுத்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி சென்று சேர வேண்டும் என்பதில் மோடி உறுதியாக உள்ளார். ஜன., 11-ல் முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய கூட்டத்தில், அரசியல்வாதிகளையும் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க செய்யலாம் என்ற யோசனையை முன் வைத்துள்ளனர். அதனை உடனே நிராகரித்தவர், அரசியல்வாதிகள் வரிசையை உடைக்க முயற்சிக்கக் கூடாது என்றும், அவர்களின் முறை வரும்போது மட்டுமே தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
22-ஜன-202100:22:19 IST Report Abuse
அறவோன் "ஊசியை போட்டுக்கொண்டேன்" என்று வானொலியில் சொன்னால், "ஆமாம்..., இது உண்மை, நாங்கள் தான் போட்டோம்" என்று சொல்லிவிடப்போகிறார்கள் 😂
Rate this:
Cancel
21-ஜன-202123:28:07 IST Report Abuse
ஆப்பு பிரதமர் தடுப்பூசி போட்டுக்கலேன்னாலும் பரவாயில்லை. என்னவோ களப்பணியாளர்களுக்கு பெருசா விட்டுக் குடுப்பது போல பேசாம இருந்தா போறும். இப்ப பாத்தா ஊசி போட்டுக்கவே ஆள் இல்லாம ஏற்றுமதி ஆயிட்டிருக்கு.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
21-ஜன-202123:11:08 IST Report Abuse
S.kausalya மோடி ஊசி போட்டு கொள்வது என முடிவாகி விட்டால் ,அதை ஒரு பொது மேடையில் வைத்து நாங்கள் எல்லோரும் அது தடுப்பு ஊசி தான் என உறுதி செய்வோம். எங்கள் முன் அந்த சிரிஞ்சை எடுத்து எங்கள் கண் முன்னே அவருக்கு போட வேண்டும். அப்போது தான் ஒத்து கொள்வோம். அப்படி போடும்போது பிஜேபி காரர்கள் போட்டு கொள்ள வேண்டும். எல்லா பிஜேபி தலைவர்களும் எங்கள் முன் , நாங்கள் உறுதி செய்த பின் தான் போட்டு கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் நம்ப மாட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X